ரோபோ vs இயந்திரா : ஒரு பார்வை

robo.jpg

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் “ரோபோ” படத்தின் பெயர் இயந்திரா என முடிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ரோபோ என்னும் பெயரை வைப்பதையே ஷங்கர் விரும்பினாலும் கேளிக்கை வரி போன்ற சலுகைகளுக்காக தமிழில் மட்டும் “இயந்திரா” என்று பெயரிட்டுள்ளனர்.

இயந்திரா – பெண்பாலைக் குறிக்கும் பெயராக இருக்கிறதே என்ற ஷங்கரின் சற்று தயங்கியிருக்கிறார். பரவாயில்லை இது எனது பேத்தி “யாத்ரா” வின் பெயரைப் போல இருக்கிறது எனவே மாற்ற வேண்டாம் என ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டாராம்.

“இயந்திர மனிதன்” எனும் ரோபோவின் தமிழாக்கம் ஆங்கில டப்பிங் படங்களைப் போல இருக்கிறது என்றும் “இயந்திரன்” என்று பெயர் வைக்கலாம், அது இந்திரன் போலவும் ஒலிக்கும் என முதலில் பரிசீலிக்கப் பட்டதாம். முதல்வன், இந்தியன் போன்ற ஷங்கரின் முந்திய பட பெயர்களோடு ஒத்துப் போகும் எனவும் அலசப்பட்டதாம்.

“என் இனிய இயந்திரா” என்பது சுஜாதாவின் புகழ் பெற்ற நாவல்களில் ஒன்று என்பது குறிப்பிடத் தக்கது.

தமிழ்ப் பெயர்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்பட்டதிலிருந்து ஓரளவு நல்ல தமிழ்ப் பெயர்களை திரைப்படங்களுக்குச் சூட்டும் வழக்கம் வந்திருக்கிறது.

மலையாளப் படங்களுக்கு ஆங்கிலப் பெயர்களைச் சூட்டுவது அங்கே பெரிய விவாதத்துக்குரிய செயலாகவும் மாறியிருக்கிறது. மலையாளத்தில் வெளிவரும் படங்களில் எண்பது விழுக்காடு பெயர்களும் ஆங்கிலத்தில் தான் வெளிவருகின்றன என்பது குறிப்பிடத் தக்கது.