திருவிழாவுக்கு போகிறீர்களா… ஒரு நிமிடம் !..

அதிர அதிர இசை கேட்கும் விருப்பமுடையவர்களா நீங்கள் ? காதில் ஹெட்போன் மாட்டி உச்ச பட்ச இசையைக் கேட்பவர்களா நீங்கள் ? திருவிழாக்களில் கடவுளே பயந்து ஓடுமளவுக்கு சத்தமாய் பக்திப் பாடல்களை மெய்மறந்து கேட்பவரா நீங்கள் ? உங்களுக்காகவே யூ.கே யிலிருந்து வந்திருக்கிறது இந்த புதிய ஆராய்ச்சி.

திருவிழா அலறல்கள், அதிக சத்தத்தில் கேட்கப்படும் பாடல்கள், இவை காதைச் செவிடாக்கும் அபாயம் உண்டு என எச்சரிக்கிறது இந்த ஆராய்ச்சி.

குறிப்பாக இன்றைய இளைஞர்களிடையே பரவி வரும் இரவு விடுதி ஆட்டங்களும், அதில் போதையுடன் கேட்கும் நூறு டெசிபல்களையும் கடந்த உச்சஸ்தாயி இசையும் காதுகளை முடமாக்கி விடுகிறதாம்.

சுமார் 2700 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் அதிக சத்தத்துடன் இசை கேட்பவர்களில் 80 விழுக்காட்டினருக்கு காதுகளில் கோளாறு ஏற்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது.

அதிக சத்தத்துடன் இசை கேட்பதைத் தவிர்க்க வேண்டும் எனவும், முடியாத பட்சத்தில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் இசைப் பிரியர்களை இந்த ஆராய்ச்சியை நடத்திய மருத்துவர் எம்மா ஹாரிசன் தெரிவிக்கிறார்.

இன்றைய இளைஞர்களின் காதில் ஆறாவது விரல் போல எப்போதும் தொங்கிக் கொண்டிருக்கும் ஹெட்போன்களில் 80 டெசிபலுக்கும் அதிகமான சத்தம் வருகிறது எனவும், 80 விழுக்காடு இளைஞர்கள் அதிக சத்தத்தில் பாட்டு கேட்பதையே விரும்புகிறார்கள் எனவும் ஒரு ஆராய்ச்சி ஏற்கனவே முடிவு வெளியிட்டிருந்தது.

செல்பேசிகளும், எம்.பி.3 கருவிகளும் மலிந்து விட்ட இந்த காலத்தில் காதுகளைச் செவிடாக்கும் ஆபத்தையும் கூடவே சுமந்து வருகின்றன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

அதிக சத்தத்தில் பாடல் கேட்பது, தொடர்ச்சியாக நிறைய நேரம் பாடல் கேட்பது, அதிக சத்தம் ஏற்படுத்தும் பொது விழாக்கள், திருவிழாக்கள் போன்றவற்றில் கலந்து கொள்வது போன்றவற்றை தவிர்ப்பதே (குறைந்த பட்சம் சத்தத்தை விட்டு தூரமாய் நிற்பதே)
காதுகளுக்காய் நாம் செய்யும் ஆரோக்கியமான செயல் ஆகும்.

10 comments on “திருவிழாவுக்கு போகிறீர்களா… ஒரு நிமிடம் !..

  1. மிக்க நன்றி. எனக்காகவே பதிவு பொட்டமாதிரி இருக்கு!!
    ஹெட்போனில் பாட்டு கேட்க எனக்கு பிடிக்கும்.
    ஸ்ரியோ சவுண் அருமையாக வருவதை அனுபவிக்கலாம்.
    ஆனா பெரிசா போடுவதில்லை.

    Like

  2. ///இன்றைய இளைஞர்களின் காதில் ஆறாவது விரல் போல///

    காதுக்கு எதுக்குங்கண்ணா விரல்… அதுவும் ஆறாவது விரல்….

    Like

  3. //மிக்க நன்றி. எனக்காகவே பதிவு பொட்டமாதிரி இருக்கு!!
    ஹெட்போனில் பாட்டு கேட்க எனக்கு பிடிக்கும்.
    ஸ்ரியோ சவுண் அருமையாக வருவதை அனுபவிக்கலாம்.
    ஆனா பெரிசா போடுவதில்லை.//

    பெருசா போட்டாதான் பிரச்சனை பெருசாகும். எனவே கவலைப்படாதீங்க சுரேஷ் 🙂

    Like

  4. /காதுக்கு எதுக்குங்கண்ணா விரல்… அதுவும் ஆறாவது விரல்….

    //

    கைகளில் எப்போதும் தொங்கிக் கொண்டிருக்கும் ஆறாவது விரல் போல, காதுகளில் தொங்கிக் கொண்டிருக்கிறது ஹெட்போன் – ன்னு விளக்கமா சொன்னாதா உனக்கு இனிமே புரியும். காரணம்… உனக்கும் கல்யாணமாயிடுச்சு !!!! 😉

    Like

Leave a comment