இட்லி, தோசை சுட இயந்திரம் !

அரிசியும் உளுந்தையும் ஊற வைத்து, ஆட்டுரலில் அரைத்து காலையில் தோசையோ, இட்டிலியோ சுடுவது ரொம்ப கடினமாய் இருக்கிறதே என நினைப்பவர்களுக்காகத் தோன்றியவை தான் தெருவோர மாவு விற்பனை நிலையங்கள்.

காலையில் போனோமா, ஒரு கவர் மாவு வாங்கினோமா தோசை சுட்டோமா தின்றோமா சென்றோமா என உருமாறி விட்டது வாழ்க்கை.

இந்தத் தோசையைக் கூட ஒரு இயந்திரம் சுட்டுத் தந்தால் நன்றாக இருக்குமே என நினைக்கிறீர்களா ? அதற்கும் இயந்திரங்கள் இருக்கின்றன ! உண்மை தான் விளையாட்டு இல்லை !

மாவைப் போட்டால் இட்டிலி சுடலாம், தோசை சுடலாம், சப்பாத்தி சுடலாம், சமோசா செய்யலாம் அப்படி பல்வேறு இயந்திரங்கள் உள்ளன. அதுவும் நமது இந்தியத் திரு நாட்டில்.
CFRTI எனப்படும் நடுவண் உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தின் கண்டுபிடிப்புகள் இவையெல்லாம் . எல்லாவற்றுக்கும் உஷாராய் காப்புரிமையும் வாங்கி வைத்தாயிற்று.

ஒரு மணி நேரத்துக்கு எண்ணூறு இட்டிலி, எண்ணூறு சப்பாத்தி என இந்த இயந்திரங்கள் நல்ல சுவையாக உணவுகளை தயாரித்துத் தள்ளுகின்றன.

இப்படி இயந்திரங்கள் எல்லாம் எதுக்கு ? பேசாம கொஞ்சம் கொஞ்சமாய் சுட்டு தேவைக்கேற்ப பரிமாற வேண்டியது தானே எனும் உங்களுடைய எண்ணம் தவறில்லை. ஆனால் இப்படி ஒரு சூழல் நினைத்துப் பாருங்கள்.

ஒரு மாவட்டத்தில் ஒரு நிலநடுக்கம், அல்லது வெள்ள அபாயம் நேர்ந்து விடுகிறது ஆயிரக்கணக்கான மக்கள் தனியே பள்ளிக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். அனைவருக்கும் உணவு வழங்க வேண்டும். எத்தனை பேர் எத்தனை மணி நேரம் தயாரிப்பது ? இந்த இயந்திரம் இருந்தால் போதும் சட்டென அனைவருக்கும் தேவையான உணவு கிடைத்து விடும்.

இந்த இயந்திரங்களை அடிக்கடி பரிசீலனை செய்து நவீனப்படுத்தவும் செய்கின்றனர். இப்போது தோசையுடன் கூடவே சட்னியும் தயாராக்குகின்றன இயந்திரங்கள்.
காலப்போக்கில் சின்ன இயந்திரங்கள் வரக் கூடும், அவை நமது சமையலறைகளில் இடம் பிடிக்கக் கூடும்.

10 comments on “இட்லி, தோசை சுட இயந்திரம் !

 1. கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு முன்பு Indian Food & Fermentation Limited என்ற நிறுவனம் Dosa King என்ற பெயரில் தோசை தயாரிக்கும் இயந்திரம் ஒன்றினைக் கண்டுபிடித்தது. சுகாதாரமான முறையில் தோசை தயாரிக்கப்படும் இந்த வெண்டிங் மெஷைனை இந்திய இரயில் நிலையங்கள் அனைத்திலும் நிறுவப் போவதாகச் சொன்னது இந்நிறுவனம். காசு போட்டால் ஒரிரு நிமிடங்களில் உங்கள் கைகளில், சூடான மசாலா தோசை வந்து விழும்.

  இந்நிறுவனம் பங்குச் சந்தைக்கும் வந்தது. நானும் சில பங்குகளை வாங்கினேன். ஆனால் சில இந்த மெஷின் சொன்னபடி மார்க்கெட்டுக்கு வரவும் இல்லை. நிறுவனமும் இழுத்து மூடப்பட்டது.

  – சிமுலேஷன்

  Like

 2. வருகைக்கு நன்றி செந்தழல், சிமுலேஷன் & குடுகுடுப்பை 🙂

  சாப்பிடறதுக்கு எந்திரமா ? ம்ம்ம்… வீட்ல சாப்பாடு போடாம இருந்தாங்கன்னா தெரியும், எந்திரம் வேணுமா இல்லையான்னு 🙂

  பசி எனும் மந்திரம் வந்தால் – நம்
  இரு கைகளே எந்திரம் ஆகும்.

  Like

 3. //இந்நிறுவனம் பங்குச் சந்தைக்கும் வந்தது. நானும் சில பங்குகளை வாங்கினேன். ஆனால் சில இந்த மெஷின் சொன்னபடி மார்க்கெட்டுக்கு வரவும் இல்லை. நிறுவனமும் இழுத்து மூடப்பட்டது.

  – சிமுலேஷன்

  //

  ம்ம்.. சோகம் 😦

  Like

 4. dear simulation,

  indian food and fermentation is fraud company , in 1995 -1997 almost 1000 compaines came in public ltd issues shares , all are closed. each company swindled intherange of minimum 3 crs thorgh public issues.

  kaveri ganesh

  Like

 5. dear all, tku for the info. s, as simulation expressed, there were many machines in the past. as he has informed one machine was installed in central station way back. i don’t remember the exact year. the machine is an automatic vending machine nd if u drop coins then it wil give u a masal dosai, tat too sudach suda. s, the dosai wil b made before u automatically nd the masala wil b placed nd the dosai wil b folded nd given. no assistant was there to assist the machine. i had a tast of the same dosai nd it was excellent. after some time it was discontinued. here what i want to express is tat some ideas r ahead of time. as such it wil not click. may b if some one tries the same idea today with a variation, like the same machine is issuing ordinary dosai, masal dosai, onion dosai, onion rava, sadharava, it may click. with best wishes to one who may try to manufacture such machines.

  Like

 6. இட்லி கடை ஆரம்பிக்க நினைக்கிறேன் தங்களிடம் இயந்திரங்கள் இருந்தால் பரிந்துரைக்கவும்.
  நன்றி.

  Like

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s