வரும் வழியில்… தம், ஐபோன் மற்றும் மின்வெட்டு !

“புகைக்கத் தடை” என்பது பெயரளவில் தான் இருக்கிறதோ எனும் சந்தேகம் மதிய உணவுக்குப் பின் அலுவலக டீக்கடைகளின் ஓரத்தில் குவியும் புகையால் ஏற்படுகிறது.

“ஏம்பா… புகை பிடிக்கத் தடை போட்டாங்க தெரியுமா இல்லையா ?” என ஹாயாக ஊதிக் கொண்டிருந்த நண்பன் ஒருவனிடம் கேட்டேன்.

“ஆமா..அவரே பாம் வைப்பாராம். அவரே போய் புடிப்பாராம்” ன்னு முதல்வன்ல வர டயலாக் கணக்கா, “ அவங்களே தம் விப்பாங்களாம், ஆனா புடிக்கக் கூடாதாம். புடிக்காம ஷோகேஸ்லயா கொண்டு வைக்க முடியும்” என்றான் நியாயமான லாஜிக் படி.

சரி என்னதான் சொல்ல வரே ? – மீண்டும் கேட்டேன்.

எவனாவது வந்து புடிச்சா 200 ரூபா கட்டிட்டு இன்னொரு தம் பத்த வைப்பேன் என்றான் கூலாக.

பைக்கில் காத்து குறைவு என சொல்லி நடுவழியில் நிறுத்தி ஐந்து பத்து சம்பாதிப்பவர்களிடம் மொத்தமாய் பிச்சை எடுக்கும் வெள்ளைச் சீருடை ஆசாமிகள் கவனத்துக்கு !… ஐடி கம்பெனிகளின் முன்னே உங்களுக்கு நிறைய வசூலாகும் !

0

உடன் பணிபுரியும் நண்பர் ஒருவர் கடந்த மாதம் அமெரிக்காவிலிருந்து வருகையில் ஒரு புத்தம் புதிய ஆப்பிள் ஐபோன் வாங்கி வந்திருந்தார்.

அங்கே தான் மச்சி எல்லாமே ஒரிஜினல் கிடைக்கும். என்றெல்லாம் பீத்திக் கொண்டிருந்தவனை இன்று காலையில் பார்த்தேன்.

ஐபோனின் மேல் மஞ்சள் பொட்டு வைத்திருந்தான்.

“இந்த மஞ்சளும் இறக்கு மதியா ? இல்லை உள்ளூரா ?” என்றேன் சிரித்தபடி.

பூஜை பண்றேன்னு சொல்லி போனோட காமராவை காலிபண்ணிட்டா என் பொண்டாட்டி என மெலிதாய் சலித்துக் கொண்டான் அவன்.

அலுவலகம் வந்து இருக்கையில் அமர்ந்து பார்த்தால் எனது கணினியில் நான்கு மூலைகளிலும் வாஸ்து படி மஞ்சள் வைத்து சென்றிருந்தார்கள்.

0

வரும் வழியில் காலை 9 மணிக்கு ஒரு தெரு முழுவதும் விளக்குகள் எரிந்து கொண்டிருந்ததைப் பார்த்தேன் !

வியப்பு !

கரண்ட் இல்லாமல் பாவம் தமிழகமே அல்லாடுகிறது. அதிகாரிகள் இன்னும் கொஞ்சம் பொறுப்பாய் நடந்து கொள்ளலாமே. காலையில் வெளிச்சம் வந்ததும் அணைத்து விட்டால் எவ்வளவோ கரண்ட் மிச்சமாகுமே என தோன்றியது.

எங்கள் கிராமத்தில் நள்ளிரவு 1 மணி முதல் 2 மணி வரையும் கரண்ட் கட் அடிக்கிறாங்களாம். என்ன லாஜிக்கோ தெரியவில்லை.

“கஷ்டப்பட்டு தூங்க ஆரம்பிக்கிறோம் நல்ல தூக்கம் வந்த உடனே கரண்டை கட் பண்ணி எழும்ப வெச்சுடறாங்க. அப்புறம் தூங்கவே மூணு மணி ஆயிடுது” என அங்கலாய்த்தான் கிராமத்து நண்பன் ஒருவன்.

நியாயம் தான் ! என்று தணியும் இந்த தாகம் !

25 comments on “வரும் வழியில்… தம், ஐபோன் மற்றும் மின்வெட்டு !

 1. படத்திலிருக்கும் இடம் அண்ணா சாலை, ஐடிசி கட்டிடத்தை ஒட்டிய சந்திலிருக்கும் கையேந்திபவன். இன்னும் விவரமாக சொல்ல வேண்டுமென்றால் ஆனந்த விகடன் அலுவலகத்துக்கு அருகில்…

  Like

 2. அந்தப் பொண்ண எப்பிடி படம் பிடித்தீர்கள்? எனக்கும் வேணும். தம்

  Like

 3. anna unga kopathai alaga velipaduthureenga aana kopapatathey theriyama irukura mathiri . unga kopam maraimugama iruku. itharku karanam payama allathu aduthavarai punpadutha kudathu en kira ennama theriyavillai.
  nichayama payam illai .
  eenna padaipaliku payam kidayathu

  nandri
  bala

  Like

 4. படத்த பாக்கும் போது ஆசையா இருக்கு . . . . . . ஒரு தம் போடலாமேன்னு

  எத்தன பெரியார் வந்தாலும் வாஸ்து போன்ற சமாச்சாரங்கள் மக்களிடமிருந்து நீங்கப்போவதில்லை.

  நித்தில்

  Like

 5. //கஷ்டப்பட்டு தூங்க ஆரம்பிக்கிறோம் நல்ல தூக்கம் வந்த உடனே கரண்டை கட் பண்ணி எழும்ப வெச்சுடறாங்க. அப்புறம் தூங்கவே மூணு மணி ஆயிடுது” //

  நாகர்கோவிலிலும், கோவில்பட்டியிலும் இதே மாதிரி துன்பத்தை அனுபவித்தேன். அப்ப சென்னையில கரண்ட் கட் கிடையாதா?

  Like

 6. செவ‌த்த‌ப்பா, துபை (ஐக்கிய‌ அற‌பு அமீர‌க‌ம்)

  வ‌ண‌க்க‌ம், சேவிய‌ர் அண்ணா. அதென்ன‌ ஒரு ஆர‌ண‌ங்கை ப‌ட‌மெடுத்து ப‌தித்திருக்கிறீர்க‌ள்? வாழ்த்துக்க‌ளும், பாராட்டுக்க‌ளும் புகை ந‌ம‌க்குப் ப‌கை எனும் ப‌திவைத் த‌ந்து, எல்லோருக்கும் ஞாப‌க‌மூட்டியத‌ற்கு.

  Like

 7. அம்மணி ஏன் கண்ண மூடிகிட்டு தம் அடிக்குது?

  //படத்திலிருக்கும் இடம் அண்ணா சாலை, ஐடிசி கட்டிடத்தை ஒட்டிய சந்திலிருக்கும் கையேந்திபவன். இன்னும் விவரமாக சொல்ல வேண்டுமென்றால் ஆனந்த விகடன் அலுவலகத்துக்கு அருகில்…//

  அடெங்ப்பா… பரவாலியே… அப்படி அந்த பொண்னோட போன் நம்பர் கொஞ்சம் கேட்டு வாங்கி கொடுங்களேன்.

  Like

 8. //anna unga kopathai alaga velipaduthureenga aana kopapatathey theriyama irukura mathiri . unga kopam maraimugama iruku. itharku karanam payama allathu aduthavarai punpadutha kudathu en kira ennama theriyavillai.
  nichayama payam illai .
  eenna padaipaliku payam kidayathu

  //

  சாமி என்னென்னவோ சொல்லுது.. எனக்கு ஒண்ணுமே புரியலை 😀

  Like

 9. //அடெங்ப்பா… பரவாலியே… அப்படி அந்த பொண்னோட போன் நம்பர் கொஞ்சம் கேட்டு வாங்கி கொடுங்களேன்//

  உட்டா பொண்ணையே வூட்டுக்கு அனுப்ப சொல்லுவே போலிருக்கே !

  Like

 10. //innaiku namaku power cut!!!!!!
  therthaluku piragu avungalaku powercuut!!!!

  //
  நாடோடி… நீங்க பெரிய சிந்தனை வாதி 🙂

  ( பவர் வந்ததும், பவர் வரும்ங்கிற மூட நம்பிக்கை எல்லாம் வேண்டாம். முந்தைய திமுக அரசின் மோசமான செயல் திட்டம் காரணமாக மின்வெட்டு இன்னும் சில ஆண்டுகள் தொடரும் எனும் அறிக்கை மட்டுமே வரும் 🙂

  Like

 11. //Antha pannin mugavari irunthal Dr ANBUMANI aayaviku anupi vidungal……

  //

  பாவம் அது இப்போதைக்கு தம் மட்டும் தான் அடிக்குது ! விட்டுடுங்க… இல்லேன்னா ஒரு பஃப் கேளுங்க… அத வுட்டுட்டு….

  Like

 12. //Tea thammu illana logic varathu thalaiva-:).//

  ம்ம்ம்… இப்படி சொல்லி சொல்லியே தப்பு தப்பா லாஜிக் போடுங்க 😉

  Like

 13. //innaiku namaku power cut!!!!!!
  therthaluku piragu avungalaku powercuut!!!!

  //
  நாடோடி… நீங்க பெரிய சிந்தனை வாதி

  ( பவர் வந்ததும், பவர் வரும்ங்கிற மூட நம்பிக்கை எல்லாம் வேண்டாம். முந்தைய திமுக அரசின் மோசமான செயல் திட்டம் காரணமாக மின்வெட்டு இன்னும் சில ஆண்டுகள் தொடரும் எனும் அறிக்கை மட்டுமே வரும்

  //
  Hmmmm …..correct amma venral JAYA TV il powercut illamal Makkal serum sirapumaga irupathaga special program varum……
  V.Kanth venral athu SUNTV sirappu parvaiyaga a varum….
  onnu nichaiyam ..Ottu pottavanakku ethuvum varathu…..avan vazhkam pol manada mayilda…jodi no1 ,comedy time parthu kondu ,rajini arasiyalku varavara ena padithu kondu pozuthai otta vendiyathutahn….

  Like

 14. //
  அம்மணி ஏன் கண்ண மூடிகிட்டு தம் அடிக்குது?

  //படத்திலிருக்கும் இடம் அண்ணா சாலை, ஐடிசி கட்டிடத்தை ஒட்டிய சந்திலிருக்கும் கையேந்திபவன். இன்னும் விவரமாக சொல்ல வேண்டுமென்றால் ஆனந்த விகடன் அலுவலகத்துக்கு அருகில்…//

  அடெங்ப்பா… பரவாலியே… அப்படி அந்த பொண்னோட போன் நம்பர் கொஞ்சம் கேட்டு வாங்கி கொடுங்களேன்.
  //

  :)))))))))))))))))

  Like

 15. //
  சேவியர் சொன்னது,

  அக்டோபர் 17, 2008 இல் 2:15 பிற்பகல்

  //அடெங்ப்பா… பரவாலியே… அப்படி அந்த பொண்னோட போன் நம்பர் கொஞ்சம் கேட்டு வாங்கி கொடுங்களேன்//

  உட்டா பொண்ணையே வூட்டுக்கு அனுப்ப சொல்லுவே போலிருக்கே !
  //

  இது அதைவிட சூப்பர்

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s