“கன்னிமை” விற்பனைக்கு !: இளம் பெண்களின் புது டிரெண்ட்.

 

EFG103

 

பாத்திரம் பண்டத்தை அடகு வைத்து பள்ளிக்குப் போனதெல்லாம் பழைய கதை. இப்போது அடகு வைக்கத் துவங்கியிருப்பது கன்னித் தன்மையை.

மேலை நாடுகளில் இப்போதெல்லாம் பரவலாக அடிபடும் பேச்சு “கன்னித் தன்மை விற்பனைக்கு” விளம்பரங்கள் தான்.

படிப்பதற்குப் பணமில்லை எனவே எனது கன்னித் தன்மையை நல்ல விலைக்கு விற்கலாம் என இருக்கிறேன். ஏலத்தில் அதிக தொகைக்குக் கேட்பவர்களுடன் நான் “ஒரு நாள் முதல்வி” யாக உல்லாசமாய் இருக்க சம்மதிக்கிறேன் என சமீபத்தில் ஒரு இளம்பெண் இணையத்தில் தனது கற்பை ஏலமிட்டிருக்கிறாள்.

போட்டி போட்டுக் கொண்டு ஏலம் கேட்டு தோற்றுப் போனவர்களைத் தாண்டி சுமார் 6.4 இலட்சம் ரூபாய்களுக்கு ஒரு தொழிலதிபர் அவளை ஏலமெடுத்து அவளுக்கு “உதவி”யிருக்கிறார்.

பதினெட்டு வயதான எலீனா பெர்சியா எனும் இந்த ரொமானியன் பெண் தற்போது வசிப்பது ஜெர்மனியில்.

இவளை ஏலமெடுத்தவர் இவளை விமானத்தில் வெனிஸ் நகருக்கு வரவைத்து, கன்னித் தன்மை குறித்த மருத்துவ 12சான்றிதழ்களைச் சரிபார்த்து, விலையுயர்ந்த பரிசுகளை வழங்கி, ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் பொழுதைக் கழித்திருக்கிறார்

 

 

 

ஒரு முப்பத்தைந்து இலட்சம் ரூபாய்க்கு என்னை ஏலத்தில் எடுப்பார்கள் என நினைத்தேன். ஆனால் வெறும் ஆறு இலட்ச ரூபாய்க்கு ஏலம் போனதில் வருத்தம் தான் (!!??) என்கிறார் இந்த மாணவி. எனினும் இந்தப் பணத்தை வைத்து படிக்க முடியும் எனும் நம்பிக்கையும் இருக்கிறது என்கிறார் நல்ல பிள்ளையாட்டம்.

 

சினிமாவில் வரும் கதாநாயகன் போல ஒருவரை எதிர்பார்த்தேன் ஆனால் கிடைத்த நபர் 46 வயதான குள்ளமான ஒரு தொழிலதிபர். என்ன செய்வது இருந்தாலும் …  என விவரிக்கிறார் தனது அனுபவங்களை.

கல்வி என்பது ஒழுக்கத்தையும், அறிவையும் போதிப்பது. அதை அடையவே இப்படிப்பட்ட ஒழுங்கற்ற வழிகளை நாடவேண்டியிருக்கிறதே எனும் அதிர்ச்சி ஒருபுறம் எழ, மேலை நாடுகளின் வால் பிடிப்பதை பெருமையாய் கருதும் நம் நாட்டு மக்கள் இதை ஒரு முன்னுதாரணமாய் கொண்டு விடுவார்களோ எனும் பயம் இன்னொரு பக்கம் எழுகிறது !

 

இவளுடைய பெற்றோருக்கு விஷயம் தெரியுமா ? சட்டத்தில் இதற்கெல்லாம் இடமுண்டா ? இப்படி உலகுக்கெல்லாம் மேடை போட்டுச் சொல்கிறாளே இதனால் எதிர்காலம் பாதிக்காதா ? போன்ற உங்களுடைய கேள்விகளை எலீனா பெர்சியாவிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளவும் ( அதற்குரிய கட்டணம் எத்தனை என்பது உட்பட )

 

 

18 comments on ““கன்னிமை” விற்பனைக்கு !: இளம் பெண்களின் புது டிரெண்ட்.

  1. உங்கள் இடுகையில் சில விஷயங்கள் விட்டு போய் இருக்கின்றன. அந்த பெண் பிடித்து இருந்தால் திருமணத்துக்கும் ரெடி என்கிற ரீதியில் தான் விளம்பரப்படுத்தினார். ஆனால் ஒரு கப் காப்பிக்கு தோட்டத்தை விலைக்கு வாங்க யாரும் முன் வரவில்லை

    //மேலை நாடுகளின் வால் பிடிப்பதை பெருமையாய் கருதும் நம் நாட்டு மக்கள் இதை ஒரு முன்னுதாரணமாய் கொண்டு விடுவார்களோ எனும் பயம் இன்னொரு பக்கம் எழுகிறது//

    இன்னும் எத்தனை நாளைக்கு தான் இந்த போலி பிம்பத்தை பாதுகாப்பது, ஏய்ட்ஸில் இந்தியா முதலிடம் தெரியுமா?

    Like

  2. //கல்வி என்பது ஒழுக்கத்தையும், அறிவையும் போதிப்பது…….//

    சரியா சொன்னிங்க…

    //ஒரு கப் காப்பிக்கு தோட்டத்தை விலைக்கு வாங்க யாரும் முன் வரவில்லை…//

    அது சரி,
    பால் குடிக்க பசு வையே விலைக்கு வாங்குறதா ?

    Like

  3. //பால் குடிக்க பசு வையே விலைக்கு வாங்குறதா ?//

    இதுக்கு காபி உதாரணமே தேவலை, இது டப்புள் மீனிங்ல இருக்கு

    Like

  4. Pingback: Top Posts « WordPress.com

  5. என் வீட்ல உதவாத டிவிடி ப்ளேயர் ஒன்னு எடத்த அடச்சிக்கிட்டிருக்கு. அத ஏலம் விட முடியுமா…

    Like

  6. You Are Posting Really Great Articles… Keep It Up…

    We recently have launched a website called “Nam Kural”… We want the links of your valuable articles to be posted in our website…

    தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,
    http://www.namkural.com.

    நன்றிகள் பல…

    – நம் குரல்

    Like

  7. இப்படிபட்ட விளம்பரமெல்லாம் எந்த இனையதளத்தில வெளிவருது? நம்ம கண்ணுல படமாட்டேங்குத..

    அப்புறமா, விளம்பரம் கொடுத்தது எந்த புள்ளைங்க மேல் படமா அல்லது கீழ் படத்தில உள்ள புள்ளையா.

    Like

  8. //விளம்பரம் கொடுத்தது எந்த புள்ளைங்க மேல் படமா அல்லது கீழ் படத்தில உள்ள புள்ளையா.//

    எல்லாமே ஒரு ஆள் தான் நித்தில்… ஒண்ணு பி.சி ஸ்ரீராம் ஒளிப்பதிவில் 😀

    Like

  9. /என் வீட்ல உதவாத டிவிடி ப்ளேயர் ஒன்னு எடத்த அடச்சிக்கிட்டிருக்கு. அத ஏலம் விட முடியுமா…//

    “புளூ” ரே வா 😀

    Like

  10. //அந்த பெண் பிடித்து இருந்தால் திருமணத்துக்கும் ரெடி என்கிற ரீதியில் தான் விளம்பரப்படுத்தினார்//

    “முதல்” அனுபவம் விற்பனைக்கு. அப்புறம் புடிச்சிருந்தா கல்யாணம் கட்டிக்கோன்னா என்னங்க அர்த்தம் 😀

    //இன்னும் எத்தனை நாளைக்கு தான் இந்த போலி பிம்பத்தை பாதுகாப்பது, ஏய்ட்ஸில் இந்தியா முதலிடம் தெரியுமா? //

    எய்ட்ஸ் க்குக் காரணம் “பாது”காப்பு இல்லாமை !

    Like

Leave a comment