கொசுக்களால் ஒரு மலேரியா விளம்பரம் !

Hitlar1

 

உலகெங்கும் மலேரியா நோய் குறித்த விழிப்புணர்வு தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது. உலகெங்கும் பல்லாயிரம் உயிர்களை ஆண்டுதோறும் அழித்துக் கொண்டிருக்கும் இந்த நோய் குறித்த முழுமையான விழிப்புணர்வு இன்னும் பல்வேறு நாடுகளில் இல்லை.

எப்படியாவது வித்தியாசமான முறையில் விளம்பரங்கள் செய்து இந்த நோய் குறித்த விழிப்புணர்வைப் பரப்ப வேண்டும் என நினைத்த ஸ்பானிஷ் விளம்பர நிறுவனம் ஒரு புதுமையான உத்தியைக் கண்டு பிடித்தது !

மலேரியாவைப் பரப்பும் கொசுக்களின் படங்களைக் கொண்டே ஓவியம் வரைவது எனும் சிந்தனை அடிப்படையிலான அந்த உத்தி பார்வையாளர்களை வியக்க வைக்கிறது !

“ஆப்பிரிக்கா டைரக்டோ” எனும் அமைப்பு மூலம் நடத்தும் மலேரியா நோய்க்கான இந்த விளம்பரப் படங்கள் வியப்புணர்வையும், விழிப்புணர்வையும் ஒரு சேர நிகழ்த்துகின்றன.

உதாரணமாக ஹிட்லரின் உருவப் படம் ஒன்று வரையப்பட்டிருக்கிறது அதன் கீழே வாசகம் “மலேரியாவைப் போல அதிக உயிர்களைக் கொல்ல யாராலும், எதுவாலும் முடியாது !

3 comments on “கொசுக்களால் ஒரு மலேரியா விளம்பரம் !

  1. //“மலேரியாவைப் போல அதிக உயிர்களைக் கொல்ல யாராலும், எதுவாலும் முடியாது ! “//

    இன்னும் எத்தன வருஷத்துக்கு ஹிட்லரின் பேரயே போடப்போறாங்க.. நம்ம பக்கத்து வீட்டு ராஜபக்ஷேவையும் சேத்துக்குங்கப்பா

    Like

  2. //இன்னும் எத்தன வருஷத்துக்கு ஹிட்லரின் பேரயே போடப்போறாங்க.. நம்ம பக்கத்து வீட்டு ராஜபக்ஷேவையும் சேத்துக்குங்கப்பா…//

    ஏன் உங்க பிரபாகரன் இது வரைக்கும் யாரையும் கொண்டதே இல்ல தானே..

    Like

Leave a comment