அகரம் இப்போ சிகரம் ஆச்சு ! : ஹீரோவா.. ஜீரோவா ?

 

கில்லி விளையாடிக்கொண்டிருக்கிறான் தெருவோரச் சிறுவன். கில்லி விஜய் வருகிறார். நீ படிச்சா ஹீரோ, படிக்கலேன்னா ஜீரோ என்கிறார்.

பாறை உடைக்கிறான் சிறுவன், சூர்யா வருகிறார். படிச்சா ஹீரோ, இல்லேன்னா ஜீரோ என்கிறார்.

பூ விற்றுக் கொண்டிருக்கிறாள் சிறுமி ஒருத்தி படித்தா ஹீரோ, படிக்கலேன்னா ஜீரோ என்கிறார் ஜோதிகா..

கல்வியறிவு குறித்த விழிப்புணர்வு எனும் நல்ல நோக்கத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்த குறும்படம் கனமான செய்திகளை பளிச் பளிச் என சொல்கிறது.

கல்வியறிவு குறித்த விழிப்புணர்வுக்காக பல்வேறு வகைகளில், அரசும் அமைப்பும் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இந்த குறும்படமும் தனது பங்களிப்பை வழங்க வந்திருக்கிறது.

சமூக ஆர்வமும், சமூகத்துக்கு ஏதேனும் நல்லது செய்ய வேண்டும் எனும் நோக்கமும் கொண்ட இந்த குழுவினரை எத்தனை பாராட்டினாலும் தகும்.

திரைப்படம் ஏற்படுத்தும் தாக்கத்தை வேறு எந்த ஊடகமும் ஏற்படுத்தாது எனும் சூழலில் விஜய், சூர்யா, மாதவன், ஜோதிகா, ஹாரிஸ் ஜெயராஜ், நா.முத்துகுமார், கே.வி ஆனந்த் என மக்களின் ரசனைக்குப் பிரியமான குழுவினர் இந்தப் படத்தை உருவாக்கியிருப்பது இதன் ஆத்மார்த்த தேவை குறித்த புரிதலை வெளிப்படுத்துகிறது. அகரம் இப்போ சிகரம் ஆச்சு !

படம் எடுத்தாயிற்று. இதை வெறுமனே பொதிகையில் மட்டும் அவ்வப்போது காட்டினால் எடுத்த நோக்கமே நிறைவேறாமல் போய் விடும்.

பிரபலமாக இருக்கின்ற தனியார் சானல்களில் இதைப் போன்ற சமூக விழிப்புணர்வு குறும்படங்கள் மற்றும் விளம்பரங்கள் ஒரு குறிப்பிட்ட அளவேனும் தினமும் ஒளிபரப்பப் பட வேண்டும் எனும் நிலையையும் உருவாக்க வேண்டும்.

நல்லெண்ணாம் ஈடேறட்டும், கல்வி வெளிச்சம் இயலாதார் கூரைகளுக்குள்ளும் இளைப்பாறட்டும்.

திரைத் தத்துவம் : ஏழைப் பிள்ளைகளின் கல்வியறிவு பற்றிய குறும்படத்தையும் அட்டகாச ஆடம்பர கன்னிமேராவில் தான் வெளியிட வேண்டியிருக்கிறது 🙂 

10 comments on “அகரம் இப்போ சிகரம் ஆச்சு ! : ஹீரோவா.. ஜீரோவா ?

  1. மிக அருமையாக இருந்தது அந்த குறும்படம். நான் அதை தனியார் தொலைக்காட்சியில்தான் பார்த்தேன்.
    இன்றைய தலைப்புச் செய்தியினை இரவுக்குள் மறந்துவிடுகிற மக்கள் இதனை செவிமடுத்து, சிந்தையினுள் ஆழ்ந்தால் மிக நல்லது..

    Like

  2. ஆச்சர்யமாக இருக்கிறது, இவர்களுக்கெல்லாம் திமிர்தானே..? கான்வென்ட்டில் அட்டெண்டென்ஸ் பற்றிக்கூடக் கவலைப்படாமல் அந்த ராஸ்கல் கல் உடைக்கிறான். அவளோ, லாஸ்ட் மந்த்லி டெஸ்ட்டில் செகண்ட் ரேங்க் வாங்கிவிட்டு இம்முறை ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்க வேண்டுமென்ற எண்ணமில்லாமல் பூ விற்றுக்கொண்டிருக்கிறாள்.
    இவர்களின் பெற்றோர் இவர்களுக்காக எவ்வளவு ஃபீஸ் கட்டியிருப்பார்கள்..? அது சரி அவர்கள் கஷ்டப்பட்டு உழைத்துச் சம்பாதித்திருந்தால்தானே இவர்களுக்கு பணத்தின் அருமையோ, கல்வியின் பெருமையோ புரியும்? இவர்களையெல்லாம் சுட வேண்டும்.

    Like

Leave a comment