பெண்கள் “பை” மாட்டும் புதிய இடம் !

பெண்கள் எது செய்தாலும் அழகு தான் என வாதிடும் இளசுகளுக்கு இந்த செய்தி உரித்தாகுக.

தோளில் மாட்டிய பையைப் பார்த்திருக்கிறோம், கையில் தூக்கிச் செல்லும் பையைப் பார்த்திருக்கிறோம், இடுப்பில் தொங்க விடப்பட்டிருக்கும் பாட்டியின் சுருக்குப் பையையும் பார்த்திருக்கிறோம்.

 

இதோ.. இது புத்தம் புதுசுங்க !!!! காலில் பை !!!

அந்தப் பையில் அப்படி என்ன தான் இருக்கும் ? என்பது அவர்களுக்கும், மாட்டி விட்ட மவராசனுக்குமே வெளிச்சம்.

இனிமேல் நாமும் பறக்கலாம்…

ஸ்விட்சர்லாந்திலுள்ள ராணுவத்தில் முன்பு பணியாற்றிய Yves Rossy வினோத ஆசைகளின் சொந்தக்காரர். விமானத்துக்குள்ளே பயணம் செய்து செய்து போரடித்துப் போன அவர், பறவையைப் போல பறப்பது அதி அற்புதமாய் இருக்குமே என கனவுகளில் திளைத்தார்.

அந்த கனவுகளுக்கு வடிவம் கொடுக்க கடுமையாய் போராடிய அவருக்கு தனது கனவை மலைக்கு மேல் பறக்க விட ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் ஆனது.

ஃப்யூஷன் மேன் – என செல்லமாக அழைக்கப்படும் இவர் ஜெட் எஞ்சின் பொருத்தப்பட்ட இறக்கையை உருவாக்கி ஆல்ப்ஸ் மலைக்கு மேலாக பறந்து திரிந்து வியப்பை ஏற்படுத்தியுள்ளார். சிறகுகளுடன் பறந்த முதல் மனிதன் எனும் பெருமையையும் பெற்றுள்ளார்.

.
( எங்கள் புராணத்தில் இவர்களெல்லாம் பறந்திருக்கிறார்கள், தேவதைகள் பறக்கின்றன, வான தூதர்கள் பறக்கின்றனர் என்றெல்லாம் கோபப்படுவோர், பதட்டப் படுவோர், எரிச்சல் படுவோர், மற்றும் இன்ன பிற உணர்ச்சிகள் அடைவோர் அவற்றை என் மேல் காட்டாதிருப்பார்களாக )