அன்புமணி vs ஷாரூக்

shahrukh21.jpg

திரைப்படங்களில் புகை பிடிக்கும் காட்சிகளில் நடிக்காதீர்கள் என்று ஷாரூக்கான், அமிதாப் போன்றவர்களிடம் அன்புமணி வைத்த கோரிக்கைக்கு ஷாருக்கான் அளித்திருக்கும் பதில் அவருடைய சமூக அக்கறையை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.

திரைப்படங்களில் புகை பிடிக்கும் காட்சிகள் வைப்பது படைப்புச் சுதந்திரம் என தத்துவம் உதிர்த்து, அவருடைய படைப்புச் சுதந்திரத்திற்கு கோடரி வைத்ததாய் கலங்கியிருக்கிறார் ஷாருக்.

திரைப்படம் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தைக் குறித்து புதிதாகப் பேசுவதற்கு எதுவுமில்லை. தற்போது வீட்டுக்கு ஒரு தொலைக்காட்சி என்பது கூட மாறி அறைக்கு ஒரு தொலைக்காட்சி எனுமளவுக்கு தொலைக்காட்சிகள் ஆக்கிரமித்திருக்கின்றன.

போதாக்குறைக்கு கைப்பேசிகளிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வருகின்றன. சந்தைகளில் கிடைக்கும் நான்காயிரம் ரூபாய் கொரியன் கைபேசிகளிலேயே தொலைக்காட்சி பார்க்கும் வசதி இருக்கிறது. எங்கே தான் இருந்தாலும், என்ன தான் செய்து கொண்டிருந்தாலும் அந்த இடத்துக்கே வந்து தாக்கத்தைத் தருவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது சினிமா.

இந்த சூழலில் திரைப்படங்களில் வரும் தவறான முன்னுதாரணங்கள் சமூகத்தை பலவீனப்படுத்தும் என்னும் நியாயமான கருத்தும் வலுப்பெற்று வருகிறது. திரைப்படங்களில் புகை பிடிக்கும் காட்சிகள் வேண்டாம் என்று வலியுறுத்தும் அரசியல்வாதிகள் இருப்பதே ஒருவகையில் மனதுக்கு ஆறுதல் தருகிறது.

ரஜினிகாந்த், விஜய், சிம்பு என தென்னக பிரபலங்கள் அனைவருமே புகை பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதில்லை என்று முடிவெடுத்திருக்கின்றனர். புகை பிடிக்கவில்லை என்பதற்காக யாரும் “சிவாஜி” படத்தைப் புறக்கணித்ததாகச் செய்திகளும் இல்லை.

ஆனால் வட நடிகர்களுக்கு அன்புமணியின் கோரிக்கை அவர்களுடைய ஈகோவை இடித்திருக்க வேண்டும். இதே கோரிக்கையை பால்தாக்கரே வோ, அல்லது அத்வானியோ வைத்திருந்தால் சலாம் போட்டு ஒத்துக் கொண்டிருப்பார் ஷாருக். ஆனால் கேட்டது தமிழராச்சே. எப்படி ஒத்துக் கொள்வது ?

சினிமாத் துறையினரின் படைப்புச் சுதந்திரமாம் அது. அந்த ‘பிடிப்புச்’ சுதந்திரத்தினால் எத்தனை அடிமைகளை உருவாக்குவதாய் உத்தேசமோ ஷாருக்கிற்கு ?

அன்புமணி ஒன்றும் ஷாருக் புகை பிடிக்கக் கூடாது என்று சொல்லவில்லை. திரைப்படங்களில் பிடிக்க வேண்டாம் என்று தான் சொல்லியிருக்கிறார்.

“மால்பரோ” சிகரெட் நிறுவனம் தன்னுடைய பொருட்களை திரைப்படங்களில் காட்ட வேண்டாம் என கடந்த 2006ல் அறிவித்திருந்தது. வர்த்தக நிறுவனமே இந்த அறிவிப்பை வெளியிட்டது அப்போது பரபரப்புச் செய்தியாய் அலசப்பட்டு வந்தது.

பிரிட்டிஷ் மெடிக்கல் பத்திரிகையில் வெளியான ஆராய்ச்சி முடிவு ஒன்று திரைப்படங்களில் வரும் புகை பிடித்தல் பதின் வயதினரை புகைபிடிக்கும் பழக்கத்திற்குள் இட்டுச் செல்வதாக தெரிவித்திருந்தது.

நியூ ஹாம்ஷயரிலுள்ள டார்க்மெளத் மருத்துவ கல்லூரி இயக்குனர் “புகை பிடித்துப் பார்ப்போம் எனும் உந்துதல் திரைப்படங்களிலிருந்தே அதிகம் பெறப்படுகின்றன” என்கிறார்.

கலிஃபோர்னியா பல்கலைக்கழக விரிவுரையாளர் “ஸ்டாண்டன் கிளேன்ட்ஸ்” திரைப்படங்களில் புகை பிடிக்கும் காட்சிகள் வருவதற்கும், பதின் வயதினரின் புகைக்கும் மோகத்துக்கும் மிக மிக நெருங்கிய, நிரூபிக்கப்பட்ட தொடர்பு இருக்கிறது என்று குறிப்பிடுகிறார்.

அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் பல ஆராய்ச்சிகள் இதே முடிவை சொல்லியிருக்கின்றன என்பது குறிப்பிடத் தக்கது.

புகை பிடிக்கும் விளம்பரங்களை ஊடகங்களில் தடை செய்தது போல திரைப்படங்களிலும் தடை செய்வதே சரியாக இருக்கும் என்பது பலருடைய கருத்தாய் இருக்கிறது.

உலகளாவிய ஆராய்ச்சிகள் திரைப்படங்களில் புகை பிடிக்கும் காட்சிகள் வருவதற்கும், மக்களின் புகை பிடிக்கும் பழக்கத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்று நிரூபித்திருக்கின்றன. பதின் வயதினரையும், சிறு வயதினரையும் இந்த பழக்கத்துக்குள் இட்டுச் செல்லும் வலிமை திரைப்படத்திற்கு இருக்கிறது என்று சர்வதேச ஆராய்ச்சியாளர்களும் ஒத்துக் கொண்டிருக்கிறார்கள்.

எனவே, இத்தகைய தேவையற்ற முன்னுதாரணங்களை திரைப்படங்களிலிருந்து ஒழிக்க நடிகர்களைக் கெஞ்சிக் கொண்டிருக்காமல் அரசே ஒரு சட்டம் இயற்றுவது காலத்தின் கட்டாயமாகும்.

17 comments on “அன்புமணி vs ஷாரூக்

  1. கோக்/பெப்ஸி பற்றிய பிரச்சனை வந்தபோது … பிளைட் ஏறி போய் குடிப்பேன் என்றவர்.

    தமிழ் நாட்டுப்பக்கம் இந்த கான் வகையறாக்கள் வர முடியவில்லை என்ற கடுப்பாக இருக்கும். மற்ற எல்லா இந்திய மாநிலங்களும் சுயமிழந்து பாலிவுட்டையே பொழுது போக்க நம்பும் இந்த காலகட்டத்தில் , தமிழ் கோலிவுட்டின் த்யனி ஆவர்த்தனம் இவர்களுக்கு என்றுமே கடுப்புதான். அந்த வகையில் தமிழன் என்றாலே கொஞ்சம் கடுப்புதான்.

    Like

  2. //கோக்/பெப்ஸி பற்றிய பிரச்சனை வந்தபோது … பிளைட் ஏறி போய் குடிப்பேன் என்றவர்//

    சரியா சொன்னீங்க ! நன்றி ஞாபகப் படுத்தியமைக்கு.

    Like

  3. அப்படியே இந்த அரிவாள் எடுத்து வீசுறது இரட்டை அர்த்தத்தில் இல்லாம ஒரே அர்த்தத்தில பேசுறது கர்ச்சீப்ப கச்சையா கட்டிட்டு வந்து நச்சு நச்சுனு ஆடறது உச்ச ஸ்தாயில கத்தறது இதுக்கும் தடை போட்டுட்டா நல்லா இருக்கும்….
    இதெல்லாம் இல்லாம தமிழ் படம் எடுத்தா தமிழன் இரசிப்பானா?

    Like

  4. இன்னுமொரு கேள்வி ஒருவேளை இந்த கான்கள் இந்தியாவிலிருப்பதால் இந்த அறிவிப்புக்கு உடன்படலாம் ஆனால்
    இந்த தடையை marlon brandokalukum,traveltokalukum,jackiechankalukum எப்படி விதிப்பது????

    Like

  5. //இத்தகைய தேவையற்ற முன்னுதாரணங்களை திரைப்படங்களிலிருந்து ஒழிக்க நடிகர்களைக் கெஞ்சிக் கொண்டிருக்காமல் அரசே ஒரு சட்டம் இயற்றுவது காலத்தின் கட்டாயமாகும்//

    கண்டிப்பாக செய்யவேண்டும்.

    அப்படியே சென்சார் போர்ட் என்று ஒன்று உள்ளதல்லவா, அவர்கள் இந்த படத்தில் வெட்டு, குத்து வரும்போது கொஞ்சம் கத்தரித்துவிட்டால் நல்லது.
    ( படம் ஆரம்பித்தவுடன் தூங்கிவிடுவார்களோ!!)

    Like

  6. //இதெல்லாம் இல்லாம தமிழ் படம் எடுத்தா தமிழன் இரசிப்பானா?//

    ஏன் ரசிக்க மாட்டான் ? “தவமாய் தவமிருந்து” , “ஆட்டோகிராஃப்’ இதெல்லாம் ஓடலையா ?

    Like

  7. //இந்த தடையை marlon brandokalukum,traveltokalukum,jackiechankalukum எப்படி விதிப்பது????//

    பெரும்பாலான புள்ளி விவரங்கள் ஹாலிவுட் நடிகர்களுக்கு எதிராகத் தான் உள்ளன.

    Like

  8. //அப்படியே சென்சார் போர்ட் என்று ஒன்று உள்ளதல்லவா, அவர்கள் இந்த படத்தில் வெட்டு, குத்து வரும்போது கொஞ்சம் கத்தரித்துவிட்டால் நல்லது.
    ( படம் ஆரம்பித்தவுடன் தூங்கிவிடுவார்களோ!!)//

    சரியா சொன்னீங்க.

    ( ஒருவேளை தூங்கினதுக்கு அப்புறம் தான் படத்தையே ஓட விடுவாங்களோ 🙂

    Like

  9. oru sila nalla padangal mattum thamiz cinimaavin thazai ezuthai nirmaanippathillaiyenpathu en thaazmayanaa karuthu??
    athu thavira nalla thamiz cinemaavukaaga thavmaai thavmiruka vendum.

    Like

  10. மத்திய அமைச்சர் டாக்டர் அன்பு மணி திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிக்கு தடை கொண்டு வரப் பாடுபட்டார்.

    பீடி, சிகரெட் பாக்கெட்களில் மண்டை ஓடு படம் அச்சிட வேண்டும் என்றார். திரைப்படங்களில் மது அருந்தும் காட்சிக் குத் தடை கொண்டு வருவோம் என்றும் சபதமிட்டுள்ளார்.

    மேற்கண்ட நடவடிக்கைகள் மிக மிகச் சரியானவை.

    பிரபல திரைப்பட நடிகரான அமிதாப்பச்சன் அண்மையில் மத்திய அமைச்சர் அன்பு மணிக்கு எழுதியுள்ள ஒரு கடிதத்தில், சினிமாவில் மட்டுமே சீர்திருத்தம் கொண்டு வர விரும்பும் நீங்கள், அரசு ஊழியர்கள் மது அருந்தத் தடை விதிக்க முடியுமா என்று சவால் விட்டுள்ளார்.

    அன்புமணி இதைக் கண்டிப்பாக ஏற்க வேண்டும். அரசு ஊழியர்கள் மது அருந்துவதால் மிக மோசமான விளைவு கள் சமூகத்திற்கு ஏற்படுவது மறுக்க முடியாத உண்மை.

    காலங்காலமாய் அரசுத்துறைகளில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. பல அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதே குடி, கும்மாளங்களுக்காகத்தான்.

    அரசு ஊழியர்கள் மது அருந்தத் தடை விதித்தால் நாட்டுக்கு நிச்சயம் நன்மை விளையும்

    Like

  11. Nallathu chonna yaar saar kekkiraanga ? pattaal theriyum,vidungalen.Ivargalai cholli kuttramillai.Mathiya sukathaara amaicharakku naatu nalanilum naatilulla
    ilaingarkalukkum kedu vilainthu vida koodathu endru irukkum nalla ennathai ninaithu naam aruthaladayalaam. Khaankalum Bachankalum naattai thirutha
    ivar yaar endru ninaikkiraarkal.

    ilaignarkalai pugaipidikkum pazhakkithirkku thoonduvathil cinamaavirkku ulla pangu pattri thella thelivaaka pala veli naattu aaraychikalum iyyakkangulam
    eduthuraithullathu.purinthavarkalukku puriyattum .Puriyaathavarkal thavikkattum.

    Like

  12. //அரசு ஊழியர்கள் மது அருந்தத் தடை விதித்தால் நாட்டுக்கு நிச்சயம் நன்மை விளையும்//

    சரியா சொன்னீங்க சார் !!! நானும் உங்க கட்சி.

    Like

Leave a comment