பாட்டி கேட்டா சிரிப்பாங்க …

நெதர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய ஆராய்ச்சி முடிவை வெளியிட்டுள்ளனர். அதாவது நமது வாயிலுள்ள உமிழ் நீருக்குக் காயங்களை ஆற்றும் சக்தி இருக்கிறது என்பதே அது.

இதைத் தெரிந்து கொள்ள நெதர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் வரை போகவேண்டிய அவசியம் இல்லை என்பது உங்களுக்கும் எனக்கும் தெரியும். காரணம் இயல்பிலேயே மருத்துவத்தில் மகத்துவம் வாய்ந்த நமது பாட்டிகள், தாத்தாக்கள். காயம் பட்ட இடத்தில் சட்டென உமிழ் நீர் தொட்டு வைக்கும் மருத்துவர்கள் அல்லவா அவர்கள்.

சரி, பாட்டி தாத்தத இல்லேன்னா பரவாயில்லை. உங்க வீட்டு நாய்க்குட்டிக்கு ஒரு சின்ன காயம் பட்டா என்ன செய்யும். அது உமிழ்நீரால் அந்தக் காயத்தை நக்கி ஈரப்படுத்திக் கொண்டே இருக்கும் தானே. அதற்குத் தெரிந்த மருத்துவம் இப்போது தான் நெதர்லாந்து வாசிகளுக்குத் தெரிந்திருக்கிறது.

வாயில் ஏற்படும் புண் விரைவில் ஆறுவதற்கான காரணத்தை நாங்கள் விளக்கியுள்ளோம் என பீற்றிக் கொள்கின்றனர் நமது வைத்திய தேசத்தின் வலிமை அறியாதவர்கள்.

இனி என்ன, உமிழ்நீரில் இருக்கக் கூடிய ஹிஸ்டெயின் எனும் பொருளைப் பிரித்தெடுத்து அதன் தன்மையில் மருந்து தயாரிப்பார்களாம், நாமும் மறக்காமல் வெளிநாட்டிலிருந்து அதை இறக்குமதி செய்து பயன்படுத்துவோம். பேடெண்ட் நெதர்லாந்துக்கு போட்டுக் கொண்டு.

இன்னொன்று நினைவுக்கு வருகிறது, கல்லில் கால் இடித்து காயம் ஏற்பட்டால் அந்தக் காயத்தின் மீது சிறுநீர் கழிக்கும் வழக்கம் இன்னும் கிராமங்களில் உண்டு. அதை எந்த நாட்டுக்காரன் ஆராய்ந்து ஒரு புதிய கண்டுபிடிப்பாக வெளியிடப் போகிறானோ தெரியலையே

பின் குறிப்பு : படத்தைப் பார்த்து ரொம்ப ஜொள்ளு விடாதீங்க, அது மருந்து ! அருமருந்து.

9 comments on “பாட்டி கேட்டா சிரிப்பாங்க …

  1. என்ன அண்ணே செய்யரது, நம்ம பாட்டிகளும், அப்பத்தாக்களும் சொன்ன போது நாம பதிவு போடலை…. வெள்ளை காரன் சொன்ன உடன் தான் படிக்கிறோம்………
    //பின் குறிப்பு : படத்தைப் பார்த்து ரொம்ப ஜொள்ளு விடாதீங்க, அது மருந்து ! அருமருந்து// ஆமாம் யாரு இல்லைன்னு சொன்னது.
    சாய்கணேஷ்.

    Like

  2. எங்க வீட்டுல ஒரு பெரியஅம்மா அவங்க வீட்டுல நாய் வளப்பாங்க. எங்க வீட்டுப் பிள்ளைங்க லீவுக்கு (ஒரு இருபது வருஷம் முன்ன) அவங்க வீட்டுக்குப்போனால் நாய் கடிச்சோ, பிராண்டியோ செய்தால் கொஞ்சம் சுண்ணாம்பைத் தடவி “சரியாயிடும் போங்க”ன்னு சொல்லி அனுப்பிடுவாங்க. இதுவும் எந்த நாட்டுலயாவது சொல்லுராங்களான்னு பார்த்து நியாயப்படுத்தப் போரீங்களா?
    எங்க பசங்க இந்த நிகழ்ச்சியை காட்டு மிரண்டித்தனமாக இப்போ நினைவு கூறுவாங்க.
    அன்புடன்
    கமலா

    Like

  3. ** ஓகோ, அதான் நொந்து போயிருக்கின்ற பூமிதாய்க்கு நம்ம ஆளுங்க இப்படி மருந்து தடவுறாங்களோ? **

    இது மாத்திரமா, யோகவை எடுத்துக்கொள்ளுங்கள், அவங்க சான்றிதள் கொடுத்த பிறகு தான் அதன் மகிமை நம்மாட்களுக்கே புரிந்தது.

    Like

  4. /என்ன அண்ணே செய்யரது, நம்ம பாட்டிகளும், அப்பத்தாக்களும் சொன்ன போது நாம பதிவு போடலை…. வெள்ளை காரன் சொன்ன உடன் தான் படிக்கிறோம்………//

    அதானே !!!

    //

    //பின் குறிப்பு : படத்தைப் பார்த்து ரொம்ப ஜொள்ளு விடாதீங்க, அது மருந்து ! அருமருந்து// ஆமாம் யாரு இல்லைன்னு சொன்னது.
    சாய்கணேஷ்.//

    மறுபடியும் ஒரு… அதானே !!! 😉

    Like

  5. //நாய் கடிச்சோ, பிராண்டியோ செய்தால் கொஞ்சம் சுண்ணாம்பைத் தடவி “சரியாயிடும் போங்க”ன்னு சொல்லி அனுப்பிடுவாங்க//

    இன்னும் பேடெண்ட் வாங்கலையா ? அப்போ யாரும் கண்டுக்க மாட்டாங்க 😀

    Like

  6. //இது மாத்திரமா, யோகவை எடுத்துக்கொள்ளுங்கள், அவங்க சான்றிதள் கொடுத்த பிறகு தான் அதன் மகிமை நம்மாட்களுக்கே புரிந்தது.

    //

    அப்படி போடுங்க !!

    Like

  7. பாட்டி கேட்டா சிரிப்பாங்க சரி, உங்ககிட்ட பார்ட்டி கேட்ட குடுப்பீங்களா?

    Like

  8. //பாட்டி கேட்டா சிரிப்பாங்க சரி, உங்ககிட்ட பார்ட்டி கேட்ட குடுப்பீங்களா?//

    கேக்கற மாதிரி கேட்டா குடுப்போம்ல….

    Like

Leave a comment