குளிர்பானக் குட்டிச் சாத்தான் !

 

genelia-20தாகத்துக்குத் தண்ணீர் மோர், இளநீர் என்ற வளமான காலங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து இன்றைய இளைஞர்களின் கைகளில் கோக் பாட்டில்களாகவும், பெப்ஸி கேன்களுமாகவும் உருமாறியிருக்கிறது.

போதாக்குறைக்கு ஒரு லிட்டர், இரண்டு லிட்டர் என பெரிய பெரிய ஜம்போ பாட்டில்களும் குறைந்த விலைக்கே கிடைப்பதனால் எங்கேனும் குடும்பத்துடன் பயணம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டால் பெரிய பாட்டில்கள் சிலவற்றைத் தூக்கிச் சுமப்பது சர்வ சாதாரணமாகிவிட்டது.

2007ம் ஆண்டைய புள்ளிவிவரத்தின் படி உலக அளவில் 552 பில்லியன் லிட்டர்கள் குளிர்பானங்கள் விற்பனையாகியிருக்கின்றன. அதாவது தனிநபர் சராசரி 83. இன்னும் சில வருடங்களில் இந்த தனிநபர் சராசரி 100 லிட்டர்கள் எனுமளவுக்கு உயரும் என்கிறது பதட்டப்பட வைக்கும் புள்ளி விவரம்.

இப்படி எதற்கெடுத்தாலும் கோக், பெப்ஸி போன்ற குளிர்பானங்களை உள்ளே தள்ளுவதால் நம்முடைய எலும்புகள் பலவீனமடையும் எனவும், மிதமிஞ்சிப் போனால் உடல் உறுப்புகள் செயலிழக்கக் கூட வாய்ப்புகள் உண்டு எனவும் சொல்லி அதிர்ச்சி வைத்தியம் அளிக்கின்றனர் கீரீஸ் நாட்டு ஆராய்ச்சியாளர்கள்.

எந்தக் காலத்திலும் இல்லாத அளவுக்கு நாம் குளிர்பானங்களை அளவுக்கு மீறி பயன்படுத்துகின்றோம். அதன் விளைவுகள் எல்லா இடங்களிலும் தெரிகின்றன. பல் நோய்கள், எலும்பு நோய்கள், நீரிழிவு போன்ற நோய்கள் குளிர்பானங்களைக் குடிப்பதனால் வருகின்றன என்பது அழுத்தம் திருத்தமாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்கிறார் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட மருத்துவர் மோஸஸ் எலிசாப்.

குளுகோஸ், புரூட்கோஸ், காஃபைன் போன்றவையே குளிர் பானங்களில் அதிகமாய் காணப்படும் மூலக்கூறுகள். இவையே பல்வேறு சிக்கல்களுக்கு காரணகர்த்தாக்கள்.

அதிக கோக் உட்கொள்வதனால் உடலிலுள்ள பொட்டாசியம் அளவு குறைந்து போய்விடுகிறது. இதை மருத்துவம் ஹைப்போகலேமியா என பெயரிட்டு அழைக்கிறது. இந்த சூழல் வரும்போது உடலின் தசைகள் வலுவிழந்து போய்விடுகின்றன என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

கோக் போன்ற குளிர்பானங்களில் உள்ள சருக்கரையின் அளவு சிறுநீரகத்துக்கு அதிக வேலை கொடுத்து, சிறுநீரகம் அதிக பொட்டாசியத்தை  வெளியேற்றி, உடல் பொட்டாசியம் குறைவான சூழலுக்குத் தள்ளப்பட்டு என சங்கிலித் தொடர்ச்சியாய் சிக்கல்கள் வந்து கொண்டே இருக்கும் என எச்சரிக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

உடல் குண்டாதல், பல் நோய்கள், எலும்புருக்கி நோய் போன்ற பரவலான நோய்களுடன் எலும்புகளையும் வலுவிழக்கச் செய்து விட்டு நமது வீட்டு பிரிட்ஜ்களில் சாதுவாய் அமர்ந்திருக்கிறது இந்த சர்வதேசச் சாத்தான் !

6 comments on “குளிர்பானக் குட்டிச் சாத்தான் !

 1. உடலை மட்டுமல்ல மொத்த உலகையும் கெடுத்துவருகிறது இந்த குளிர் பான சாத்தான்கள். நிலத்தடி நீர் குறைவது, மண் வரண்டு போவதால் விவசாயம் பொய்ப்பது என்று நீண்டு செல்லும் அதன் கொடுங்கரங்கள். மொத்தத்தில் இரண்டு பேரை கொழிக்கவைப்பதற்காக மொத்த மக்களும் தங்கள் நலங்கெட்டு உழைப்பையும் கொட்டுகிறார்கள்

  தோழமையுடன்
  செங்கொடி

  Like

 2. தலைப்பில் குட்டிச் சாத்தான்னு இருக்கும் போது இவ்ளோ அழகான பெண் போட்டோ போட்டத கண்டிக்கும் அதே சமயம் அந்த கம்பெனியோட CEO நம்ப ஊர்தானாம் அந்த அம்மாவோட போட்டாவ போட்டிருந்தா ரெம்ப aptஆ இருந்திருக்கும்னு நான் நினைக்கிறேன்.

  அப்படியே இந்த பதிவ ‘ஏ தோழா இந்தா கோலா’ன்னு எவ்வளோ கோடிகள் வருமானம் இருந்தும் மேலும் சில பல லட்சங்களுக்காக விளம்பர படத்துல ஆடுறார அவருக்கும் அனுப்பி வைக்கவும்.

  Like

 3. இந்த பதிவை பார்க்கும் பொது முனால் பார்த்த ஒரு ஆங்கில திரைப்படமே நினைவுக்கு வருகிறது.. Idiocracy என்று பெயர் பெற்ற இந்த படத்தில் நம்ம ஹீரோ 2505 ம் வருடத்துக்கு சென்று விடுகிறார். 2505 ம் வருடத்தில் அங்கு விவசாயம் உட்பட அணைத்து தேவைகளுக்கும் ( கழிவறையை தவிர ) நீர்கு பதிலாக குளிர்பனமே பயன்படுத்த படுகிறது..

  http://www.imdb.com/title/tt0387808/

  நீங்களும் இந்த படத்தை பார்க்க தவறாதீர்கள்..

  Like

 4. /2505 ம் வருடத்தில் அங்கு விவசாயம் உட்பட அணைத்து தேவைகளுக்கும் ( கழிவறையை தவிர ) நீர்கு பதிலாக குளிர்பனமே பயன்படுத்த படுகிறது..
  //

  ஓ.. வாய்ப்புக் கிடைத்தால் பார்க்கிறேன் 🙂

  Like

 5. /அப்படியே இந்த பதிவ ‘ஏ தோழா இந்தா கோலா’ன்னு எவ்வளோ கோடிகள் வருமானம் இருந்தும் மேலும் சில பல லட்சங்களுக்காக விளம்பர படத்துல ஆடுறார அவருக்கும் அனுப்பி வைக்கவும்//

  யாரை 😉

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s