பெண்களை விருந்துக்கு அழைத்து…பின்….

டேட் ரேப் :  ஒரு பகீர் பயங்கரம்.

 

“ஹேப்பி பர்த் டே”

சிரித்துக் கொண்டே கையிலிருந்த மலர்க்கொத்தை நீட்டினான் விக்னேஷ். தூக்கக் கலக்கத்துடன் கதவைத் திறந்த வசந்திக்கு ஆச்சரியம் ஒரு கண்ணிலும், வெட்கம் மறு கண்ணிலும் வழிந்தது. சூரியன் கூட இன்னும் முழுசாய் விழித்திருக்கவில்லை.

“தேங்க்யூ ..”

“அப்போ, இன்னியோட உங்களுக்கு பதினாறு வயசு முடிஞ்சிடுச்சா  ?” விக்னேஷ் வசீகரமாய்ச் சிரித்தான்.

“ஹே… இருபத்து நாலு ஆகுதுப்பா…. வாழ்த்துக்கள் வாங்கும்போ சந்தோசமா இருக்கு, ஆனா வயசாகுதேன்னு கவலையாவும் இருக்கு” வசந்தியும் சிரித்தாள்.

“டுவண்டி ஃபோர் !!! வாவ்.. என்னால நம்பவே முடியல.. ஒ.கே..ஒ.கே… இன்னிக்கு ஈவ்னிங் டின்னர் என்னோட செலவு… மறுக்கக் கூடாது.. ஓகே… ?”

சொல்லி விட்டு பதிலைக் கூட எதிர்பாராமல் சட சடவென்று காரில் ஏறிப் போய் விட்டான் விக்னேஷ்.

விக்னேஷ் வசந்தியோடு வேலை பார்ப்பவன். கடந்த ஒரு ஆண்டாக இருவருக்கும் நல்ல பழக்கம் உண்டு. வசந்திக்கு விக்னேஷை ரொம்பப் பிடிக்கும். ரொம்பவே கண்ணியமாய் நடந்து கொள்வான். என்ன தேவையென்றாலும் வந்து உதவுவான். அறிவுரைகள் சொல்வான். போதாக்குறைக்கு அவ்வப்போது அவளை சில்லென மாற்றும் ஐஸ் கட்டிகளையும் வைத்துப் போவான் !

அதிகாலையிலேயே உற்சாகம் வந்து தொற்றிக் கொண்டது வசந்திக்கு. புத்தம் புதிய ஆடையை உடுத்திக் கொண்டு அலுவலகம் சென்றாள். எல்லோரிடமும் வாழ்த்துக்களை வாங்கி வாங்கி அவளுடைய பொழுது ரொம்ப சுவாரஸ்யமாகக் கழிந்தது.

மாலை நேரம் !

“போலாமா ?” கார் சாவியைக் கையில் வைத்து சுழற்றிக் கொண்டே கேட்டான் விக்னேஷ்.

“எங்கே ?” வசந்தி விளையாடினாள்.

“எங்கேயா ?…. ஹேய்… காலைலயே சொன்னேன்..  டின்னர் எல்லாமே ரெடி.. கமான்…” விக்னேஷ் குரலில் இருந்த கெஞ்சலை ரசித்துக் கொண்டே வசந்தி சொன்னாள், 

“சரி..சரி.. நான் ரெடி… பட்… கொஞ்சம் சீக்கிரம் வீட்டுக்குப் போகணும் ஓகேவா ?”

“யா…”

இருவரும் காரில் கிளம்பினார்கள். கார் நேராக விக்னேஷின் வீட்டு வாசலில் வந்து நின்றது. 

“என்ன.. உங்க வீட்டுக்கு வரீங்க ? ஹோட்டல் போவோம்ன்னு நினைச்சேன்… ”

“ஸ்பெஷல் டின்னரெல்லாம் ஹோட்டல்ல குடுக்க முடியுமா என்ன ? நானே ஸ்பெஷலா பண்ணியிருக்கேன் வாங்க…”

விக்னேஷின் வித்தியாசமான அணுகுமுறை வசந்திக்குச் சிலிர்ப்பாய் இருந்தது.

மிக அழகான வீடு. வெகு சுத்தமாக இருந்தது. ஒரு பேச்சிலர் தங்கும் வீடு என்பதை சத்தியம் செய்தால் கூட நம்ப முடியாது ! “ஒருவேளை நான் வருவேன் என்று சொன்னதால் எல்லாவற்றையும் சுத்தமாய் வைத்திருக்கிறானோ ?” வசந்தியின் மனதில் கேள்விகள் ஓடின.

விக்னேஷ் வசந்தியை அழைத்துக் கொண்டு டைனிங் டேபிள் சென்றான்.

“வாவ் !!! ..” வசந்தி விழிகளை விரித்து ஆச்சரியப் பட்டாள்.

டேபிளின் நடுவே ஒரு கேக். அருகே இரண்டு மெழுகுவர்த்திகள். சுற்றிலும் உணவு வகைகள் மூடப்பட்ட பாத்திரங்களில்.

“என்ன விக்னேஷ்.. கலக்கறீங்க. என் லைஃப்ல நான் இப்படி ஒரு டிரீட் வாங்கினதே இல்லை” வசந்தி நெகிழ்ந்தாள்.

“நானும் இப்படி ஒரு டிரீட்டை யாருக்கும் குடுத்ததில்லை. இதான் முதல் தடவை”

டின்னர் சாப்பாடு ரொம்பவே மகிழ்வாய் சென்று கொண்டிருந்தது.

விக்னேஷ் ஒரு கப்பில் கொஞ்சமாய் வைன் ஊற்றி வசந்தியிடம் நீட்டினான்.

“என்னது இது ?”

“இது ஷேர்டோனே…”

“நான் பெயரைக் கேக்கலை… இது வைனா ?”

“ஏன் வைன்னு சொல்றீங்க, பதப்படுத்தப்பட்ட திராட்சைப் பழரசம் ன்னு தமிழ்ல்ல சொல்லுங்க” விக்னேஷ் சிரித்துக் கொண்டே வசந்தியின் கைகளில் அதைத் திணித்தான். “இது டாஸ்மாக் சரக்கு கிடையாதுங்க, உடம்புக்கு ரொம்ப நல்லது !”

வசந்தி தயக்கத்துடன் வாங்கி அருந்தினாள்.

கொஞ்ச நேரத்தில் ஒரு வித மயக்க நிலைக்குப் போனாள்.

“விக்னேஷ்…. வாட்ஸ் ஹே…ப்பனிங்யா…. “ வசந்தியின் குரல் குழறியது.

விக்னேஷ் இதற்காகவே காத்திருந்தவன் போல அவளைக் கைத்தாங்கலாய் அழைத்துக் கொண்டு அருகில் இருந்த படுக்கையறைக்குப் போனான். ஒரு வெறிப் புன்னகை அவனுடைய இதழ்களில் கோரமாய் உறைந்தது !

மறு நாள் காலையில் விக்னேஷின் படுக்கையறையில் கண் விழித்த வசந்திக்கு படு பயங்கர ஷாக்…. என்ன நடந்தது என்பது கொஞ்சம் கொஞ்சமாய் புரிய ஆரம்பித்தது.

விக்னேஷ் எதுவும் தெரியாதது போல ஹாலில் அமர்ந்து டி.வி பார்த்துக் கொண்டிருந்தான்.

“விக்னேஷ்.. நேற்று என்ன ஆச்சு ?” வசந்தியின் குரலில் பதட்டம்.

“நத்திங்… வைன் குடிச்சே… தூக்கம் வருதுன்னு சொன்னே… பெட்ல படுக்க வெச்சேன்.. தட்ஸ் ஆல்” விக்னேஷ் சொன்னான்.

“பொய் சொல்லாதே விக்னேஷ்.. எனக்குத் தெரியும்… வாட் ஹேப்பண்ட் ?”

“நான் ஏதும் பண்ணல, நீதான் என்னைக் கம்பல் பண்ணி.…” வின்கேஷ் சொல்லிவிட்டு டீவியில் பார்வையை ஓட்டினான்…

வசந்தி உடைந்து போய் உட்கார்ந்தாள்.

சில நாட்களுக்குப் பின், நடந்த நிகழ்ச்சிகளையெல்லாம் தனது தோழியிடன் கண்ணீருடன் பேசிக்கொண்டிருக்கையில் தான் அவளுக்கு “டேட் ரேப்” எனும் விஷயமே தெரிய வந்தது.

அதென்ன டேட் ரேப் ? மயக்க நிலையில் பாலியல் வன்முறை செய்வதைத் தான் “டேட் ரேப்” என்கிறார்கள்.

தெரிந்த பெண்களை வசீகரமாய்ப் பேசி ஹோட்டலுக்கோ, தனிமையான இடங்களுக்கோ அழைத்துச் செல்ல வேண்டியது. அவர்கள் குடிக்கும் பானத்தில் டேட் ரேப் ஸ்பெஷல் மருந்தைக் கலக்க வேண்டியது. அவர்கள் மயங்கிச் சாயும் நேரத்தில் அவர்களை பலாத்காரம் செய்ய வேண்டியது. இது தான் டேட் ரேப்பின் அடிப்படை.

மது அருந்தும் பெண்களென்றால் ஆண்களுக்கு வேலை சுலபமாகி விடுகிறது. பெண்களைக் கட்டாயப்படுத்தியோ, வசீகரமாய்ப் பேசியோ அதிகம் மதுவை அருந்த வைத்து அவர்களை மயக்க நிலைக்குக் கொண்டு சென்று தங்கள் விருப்பத்தை நிறைவேற்றி விடுவார்கள். 

இதிலுள்ள சிக்கல் என்னவென்றால், என்ன நடந்தது என்பது மறு நாள் பாதிக்கப் பட்ட பெண்களுக்கு எதுவும் நினைவில் இருக்காது. “நீதான் என்னைக் கட்டாயப்படுத்தி உறவு கொள்ளச் சொன்னே !” என ஆண் குற்றம் சாட்டினால் மறுத்துப் பேசவும் முடியாது. “ஒருவேளை அப்படி இருந்திருக்கலாமோ ? “ என்று தான் நினைக்கத் தோன்றும்.

“என்னால தான் இப்படியெல்லாம் நடந்திருக்கு. இது என்னோட தப்பு… இதுல பேச என்ன இருக்கு” என அமைதியுடனும், வலியுடனும் பெண்கள் முடங்கிவிடுவார்கள். !

பதினேழு வயதுக்கும் முப்பது வயதுக்கும் இடைப்பட்ட பெண்கள் தான் இதில் ரொம்பவே பாதிக்கப்படுகிறார்கள் என்கிறது இங்கிலாந்தில் வெளியான ஆய்வு முடிவு ஒன்று. பெரும்பாலான டேட் ரேப் கள், காதலன், பழைய காதலன், நண்பன், உடன் வேலை செய்பவர், கொஞ்சம் அறிமுகமானவர் இப்படிப் பட்டவர்களால் தான் நடக்கிறதாம்.

“அவளோட ஆடையே ரொம்ப செக்ஸியா இருந்துச்சு, என்னை வா, வா ன்னு வலியக் கூப்பிடுவது போல இருந்தது” என்பன போன்ற சால்ஜாப்புகள் அடிக்கடி ஆண்களிடமிருந்து எழும். ஒருவருடைய விருப்பம் இல்லாமலும், முழு உணர்வு இல்லாமலும் நடக்கும் எந்த உறவும் பலாத்காரம் தான். செக்ஸி ஆடை அணிவது அவரவர் விருப்பம். அது பாலியலுக்கான அழைப்பு என ஆண்கள் தவறாக அர்த்தம் கற்பிப்பது அவர்களுடைய அறியாமை மட்டுமே.

டேட் ரேப் குற்றத்தில் பயன்படும் எக்கச் சக்க மாத்திரைகள் உள்ளன. இந்த மாத்திரைகளில் சுவையோ, மணமோ, நிறமோ எதுவும் இருக்காது. ஆனால் வீரியமாய்ச் செயல்படும். அத்தகைய மருந்துகளில் மிக மிக முக்கியமானவை இவை.

ரோஹினால், ஃபுலண்ட்ரீஸிபம் எனும் வகையைச் சேர்ந்த மருந்து இது. அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட இந்த மருந்து இங்கிலாந்து, மெக்ஸிகோ போன்ற நாடுகளில் தாராளமாய்க் கிடைக்கிறது. இன்னொரு மருந்து ஜி.ஹை.பி என சுருக்கமாய் அழைக்கப்படும் காமா ஹைட்ராக்ஸி பட்ரிக் அமிலம் கலந்த மருந்துகள். மூன்றாவது ஜி பி எல் என அழைக்கப்படும் காமா புடிரெலக்டோன் !

இந்த மருந்துகள் பல வடிவங்களில், பல பெயர்களில் இந்தியாவில் வெகு சாதாரணமாகக் கிடைக்கின்றன என்பது திகிலூட்டும் உண்மையாகும். மாத்திரைகளைப் போலவே எக்ஸ்டஸி போன்ற சில பானங்களும் உள்ளன. இவையும் குடித்தால் குடிப்பவரை அப்படியே அலேக்காக மயக்க நிலைக்குக் கொண்டு செல்லும்.

மயக்கத்துடன் கொஞ்சம் செக்ஸ் உணர்வையும் இந்த மருந்துகள் தூண்டி விடுகின்றன. அதனால் மதுவிலோ, குளிர்பானத்திலோ, ஏன் தண்ணீரிலோ கூட இதைக் கலந்து கொடுத்தால் விஷயம் முடிந்து விட்டது !. குடிப்பவருக்கு முடிவெடுக்கும் திறமை முழுமையாய் போய் விடும். ஒருவித பரவச மயக்கத்துக்குள் செல்வார்கள். எதிராளியின் விருப்பத்துக்கு ஏற்ப வளைந்து கொடுப்பதும், ஒத்துழைப்பதும் ஒரு அடிமை நிலையில் நடந்தேறும்.

பெரும்பாலும் இத்தகைய மருந்துகள் பார்களிலும், இரவு விடுதிகளிலும் எக்கச் சக்கமாய்ப் புழங்குகின்றன என்கிறது காவல் துறை.  இந்த மருந்தின் வீரியம் உடலில் இருந்தாலும் அதைக் கண்டுபிடிக்க முடியாது. சிறு நீர்ப்பரிசோதனை, இரத்தப் பரிசோதனை இவையெல்லாம் கூட இத்தகைய போதை உடலில் இருப்பதைக் காட்டிக் கொடுக்காது. எழுபத்து இரண்டு மணி நேரத்துக்குப் பிறகே உடல் இதன் பாதிப்பிலிருந்து முழுமையான விடுதலையைப் பெறும் ! அளவுக்கு அதிகமாகக் கொடுத்தால் உயிரே போய்விடும் எனும் அதிக பட்ச ஆபத்தும் இத்தகைய மருந்துகளில் உண்டு.

“இத்தகைய மருந்துகளைத் தான் ரயிலில் பயணிகளுக்கு பிஸ்கட்டில் கலந்து கொடுத்து பொருட்களை லவட்டிக் கொண்டு போகிறார்கள்” என்கின்றனர் இந்திய காவல் துறை அதிகாரிகள்.

உலகெங்கும் சமீபகாலமாக இந்த டேட் ரேப் மருந்துகளின் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளன என ஐக்கிய நாடுகள் சபை சமீபத்தில் கவலை தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் கடந்த ஆண்டு சுமார் எழுபது இலட்சம் பேர் இத்தகைய மருந்துகளை சட்ட விரோதமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

இத்தகைய மருந்துகள் மருத்துவத் துறைக்கு மிக மிக முக்கியமானவை. பல நோய்களுக்கும் அறுவை சிகிச்சைக்கும் இவை தேவை என்பதால் இதைத் தயாரிக்காமல் இருக்க முடியாது. அதனால் உலக நாடுகளெல்லாம் ஒன்றிணைந்து இந்த டேட் ரேப் மாத்திரைகளின் பயன்பாட்டுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என ஐ.நா விண்ணப்பம் வைத்துள்ளது.

வருமுன் காப்பது தான் டேட் ரேப் விஷயத்தில் ஒரே வழி !

 • பலாத்காரம் செய்பவர் சினிமாவில் வரும் வில்லனைப் போல பரட்டைத் தலை, குளிக்காத உடலுடன் வருவார் என நினைக்காதீர்கள். ரொம்ப டீசண்டான  பார்ட்டியாக இருப்பார்.
 • 80 முதல் 90 விழுக்காடு டேட் ரேப்கள் மிகவும் தெரிந்த நபர்களால், அவர்களுடைய அல்லது பெண்களின் வீடுகளில் வைத்தே நடக்கின்றன. எனவே தெரிந்த ஆள் தானே என அசால்ட்டாக இருக்க வேண்டாம்.
 • பாதி குடித்த மதுவையோ, குளிர் பானத்தையோ வைத்து விட்டு தூரமாய் போகாதீர்கள். குறிப்பாக பாத்ரூம் போகும் நேரத்தில் கூட யாராவது ஒரு சின்ன மாத்திரை போட்டு உங்களை வீழ்த்தி விடலாம் ! எனவே எச்சரிக்கை தேவை.
 • இத்தகைய இடங்களுக்கு நண்பர்களுடன் சேர்ந்து ஒரு குழுவாகச் செல்லுங்கள். ஒருவரை ஒருவர் கண்காணித்துக் கொள்ளுங்கள். 
 • உங்களுக்கு முழு நம்பிக்கை இல்லாத இடங்களுக்குப் போகாதீர்கள். பொதுவாக இரவு விடுதி, நடன அரங்கு போன்ற இடங்களுக்கு சரியான பாதுகாவலோ, தோழியரோ இல்லாமல் போகவே போகாதீர்கள்.
 • பார்களுக்கோ, மது அருந்தும் இடங்களுக்கோ சென்றால், மதுவையே தொடாத ஒரு நண்பரையும் கூடவே கூட்டிப் போங்கள். 
 • எப்போதும் அலர்ட்டாக இருங்கள். ஏதேனும் தவறு நடக்கலாம் என உள்ளுணர்வு எச்சரித்தால் தாமதிக்காமல் வெளியேறிவிடுங்கள்.
 • ரொம்ப அன்பான பெண்கள் பாதிக்கப்பட மாட்டார்கள், அல்லது ரொம்ப அமைதியான பெண்கள் தப்பித்துக் கொள்வார்கள் என்றெல்லாம் வீண் கற்பனை வளர்க்க வேண்டாம். பாதிப்பு யாருக்கு வேண்டுமானாலும் நேரிடலாம். எப்போது வேண்டுமானாலும் நேரிடலாம்.
 • தெரியாத நபர் உங்களுக்கு ஏதேனும் பானத்தை வலியத் தந்தால் வேண்டாம் என நேரடியாகவே மறுத்து விடுங்கள்.
 • இணையத்தின் மூலம் கண்டெடுத்த நண்பர்களுடன் தனியே சந்திப்பதைத் தவிருங்கள். குறிப்பாக அவர்களுடன் மதுவெல்லாம் அருந்தவே அருந்தாதீர்கள்.
 • ஆண்களுடன் தனியே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், பாலியல் சார்ந்த உரையாடல்களை தவிர்த்து விடுங்கள். போதை விஷயங்களையும் தொடாதீர்கள்.
 • உங்கள் டின்னருக்காக ஆண் எவ்வளவு கஷ்டப்பட்டாலும், செலவு செய்தாலும் அதற்காக பாலியல் பரிகாரம் செய்ய வேண்டியதே இல்லை. எந்த நிலையிலும் உங்கள் உறுதியில் இருந்து சறுக்காதீர்கள். கொஞ்சம் இடம் கொடுத்தால் சிக்கல் பெரிதாகும் என்பது உறுதி.
 • ஒரு வேளை நீங்கள் பாதிக்கப்பட்டால் முதலில் உங்கள் குற்ற உணர்விலிருந்து வெளியே வாருங்கள். “ஐயோ என்னால் தான் இப்படி நடந்தது…”, “ நான் இப்படி செய்திருக்கக் கூடாது”, “ நான் நோ சொல்லியிருக்கணும்…” , “நான் சொல்றதை இனிமே யாரும் நம்ப மாட்டாங்க”, “என்னை ரொம்ப மோசமான பொண்ணுன்னு நினைப்பாங்க” என்றெல்லாம் புலம்பாதீர்கள். தைரியமாகக் காவல் நிலையத்தில் புகார் கொடுங்கள்.

விழிப்பாய் இருந்தால், விழாமல் இருக்கலாம்.

Thanks : Pennae Nee

தமிழிஷில் வாக்களிக்கலாமே…

54 comments on “பெண்களை விருந்துக்கு அழைத்து…பின்….

 1. விழிப்புணர்வைத் தூண்டும் உங்கள் சேவைக்கு வாழ்த்துகளும் நன்றிகளும் சேவியர்!!

  Like

 2. சேவிய‌ர்,
  த‌ங்க‌ளின் அல‌ச‌ல்,
  த‌ந்துள்ள‌து ந‌ல்ல‌ த‌க‌வ‌ல்.
  த‌ற்காத்து த‌ற்கொள்ள‌ வேண்டும்,
  மிக‌ வேண்டிய‌ ப‌திவு.

  Like

 3. இந்த காலத்துப் பெண்கள் கட்டாயம் படிக்கச் வேண்டிய பதிவு இது,
  இது போன்ற விழிப்புணர்வு மிக்க பதிவுகளை போடும் செவியர் சார்க்கு ரொம்ப நன்றிகள்,

  Like

 4. பாராட்ட வேண்டியது:
  பெண்களுக்கான முக்கிய அறிவுரை.
  கண்டிக்க வேண்டியது:
  ‘டேட் ரேப்’ மருந்துகளைக் காட்டிக்கொடுத்து இதே தவறு செய்யக்கூடியோருக்கு மறைமுகமாக உதவியது.
  மேலும் சேர்க்கவேண்டியது:
  1. ஆசையைத்து_ண்டும்என்று அறிந்தும் அரைகுறை ஆடை அணிவது தவறு.
  2. மடியில் கனம் (கற்பு) இருந்தும் தனிவழி செல்வது தவறு.
  3. ஆணின்சபலம் ஒரு எரி மலை. எப்போதும் வெடிக்கலாம். இதற்கு எவரும் விதிவிலக்கல்ல. குமரன், கிழவன், துறவி- எல்லோரும்இதில் அடக்கம்! ‘எரிமலை’ குமுறும்போது, கிழவி, குமரி, குளந்தைகள் – சிலர், மிருகங்களைக்கூட விட்டுவைப்பதில்லை! கவனம்! கவனம்! கவனம்!

  Like

 5. Mr.Xavier,

  I have been reading your articles since last few weeks. Its nice but, you used to point out boys only. Thats absolutely wrong. Dont think that all girls are good. Change your attitude first towards male. offcourse you are also a male. dont forget it. So many good guys are there. try to point out those guys, so that girls come to know about them. They will be safe. Try to put into right way. I need to say so much things. will say later.

  Saravana

  Like

 6. சகோ. சரவணா, 1. பெண் சம்மந்தப்பட்ட விடயத்தில் ‘நல்லவன்’ என்று எவருமில்லை! சந்தர்ப்பம் கிகடைக்கும்வரை ‘நல்லவன்’ ஆக இருக்கலாம்! அப்படி சந்தர்ப்பம் கிடைத்தும் சும்மா இருந்தால் அவன் ‘குறைபாடு’ உள்ள நோயாளி! 2. ஒருவனை நல்லவன் என்று யார்தீர்மானிப்பது? அந்தப்பெண்ணின் தீர்மானம் தவறாயிருந்தால்? 3. பெண்ணுக்கும் மனைம் புரளலாம். அவனைத்து-ண்டலாம். எனவே சரியான, மாற்றமில்லாத முடிவு தனிவழி செல்லாதிருப்பதுதான்.

  So, no girl is safe when they are alone with a boy. Some say, they had good friendship with so and so lady for years, and still they have brother-sister relationship only and so on. These are all exceptional cases and still temporary. Their numbers are negligible. You can not generalize and take as gospel truth. There are millions of incidents of ‘other’ category which is disgusting.
  Brother, don’t feel offended. If anything (between a girl and a boy) goes ‘wrong’, that is just an incident for the boy, but a disaster for the girl. That is why we are more worried about our daughters, sisters and wives.
  That is why I say, ‘No female (3 years to 100 years) should be alone with a male (6 years to 100 years).
  Also, think twice before entrusting little girls and boys to your neighbours or friends or uncles and so on.
  Prophet Mohammed (PBUH) said ‘no woman should be alone with another male (except her immediate, safe family members, like brother, father etc). Among the ones she should avoid, husband’s brother is the worst one, because his visit easily goes unnoticed!’

  Like

 7. Nanba, You misunderstood something. First you should understand onething that girls are not that much fools, for not knowing anything whats happening around them. they know well. they know the results and caution too. but they don care about it. ok.

  Nanba, Naan ithula PHD pandra alavuku informationa gather panni vachuruke.

  Tamilnatula rendu type pana thinking ponuga mela iruku. 1) Neenga explain pandra issues. 2) Neenga than. First case paravala than iruku. engavathu onu nadandalum atha publicity pandrathala athu perusa pesurom. Second case elor idathum iruku. That is Guys (Like you) think girls donot know what they are and which one is their actual problem. But actually Girls Know very well. What i said earlier.

  I have more examples.

  Girls know better than boys about them. what thier problem and all. But they really don care and that is not at all thier worry. You should understand that one.

  Enaku pala nalla ponuga friends irukanga. Naan elor idathilum ithumathiriyana kelvigala ketiruke. Result is the same old what i said.
  understood?

  Inum more explanation i can give. time not permit will reply you later.

  Saravana

  Like

 8. சகோதரர் இஸ்மாயில் கருத்துக்களோடு எனக்கு உடன்பாடு இல்லை.. இருந்தாலும் அவருடைய வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் !

  Like

 9. I have been reading your articles since last few weeks. Its nice but, you used to point out boys only. Thats absolutely wrong. Dont think that all girls are good. Change your attitude first towards male. offcourse you are also a male. dont forget it. So many good guys are there. try to point out those guys, so that girls come to know about them. They will be safe. Try to put into right way. I need to say so much things. will say later//

  நன்றி சரவணன்….. உங்கள் வருகைக்கும், வாசிப்புக்கும், தனிப்பட்ட கருத்துக்களுக்கும் !

  Like

 10. //இந்த காலத்துப் பெண்கள் கட்டாயம் படிக்கச் வேண்டிய பதிவு இது,
  இது போன்ற விழிப்புணர்வு மிக்க பதிவுகளை போடும் செவியர் சார்க்கு ரொம்ப நன்றிகள்//

  நன்றி ரிசாத் !

  Like

 11. //ரெம்ப நல்ல பதிவு அண்ணா.
  ஆனா ரெம்ப பயமாகவும் இருக்கிறது//

  பயப்படாதீங்க தங்கச்சி…. விவரம் தெரியாதவங்க தான் பயப்படணும்…

  Like

 12. //சேவிய‌ர்,
  த‌ங்க‌ளின் அல‌ச‌ல்,
  த‌ந்துள்ள‌து ந‌ல்ல‌ த‌க‌வ‌ல்.
  த‌ற்காத்து த‌ற்கொள்ள‌ வேண்டும்,
  மிக‌ வேண்டிய‌ ப‌திவு//

  நன்றி வாசன்…

  Like

 13. //இச்சமுதாயத்தில் பழி பெண்ணுக்கே..

  ஆதாலால் பெண்கள் விழிப்புணர்வு பெற உதவும் இடுகை

  வாழ்த்துகள் நண்பரே
  /

  மிக்க நன்றி…

  Like

 14. /விழிப்புணர்வைத் தூண்டும் உங்கள் சேவைக்கு வாழ்த்துகளும் நன்றிகளும் சேவியர்!!/

  நன்றி சகோதரி.

  Like

 15. Pingback: Nidur Seasons.com » Blog Archive » பெண்களை விருந்துக்கு அழைத்து…பின்….

 16. யாருக்கு என்ன தோன்றியதோ?

  இதைப் படித்ததும் என் நினைவிற்கு சட்டென்று
  வந்தவர்கள் இரண்டு பேர்.
  வெளுத்ததெல்லாம் பால் என்று நினைக்கும்
  என் மனைவியும், ஒரு தோழியும் தான்.

  உடனே அவர்களுக்கு இதைப் பற்றி விலாவரியாக
  சொல்லி எச்சரித்து விட்டேன்.

  சேவியர் அவர்களுக்கு நன்றி.

  Like

 17. //யாருக்கு என்ன தோன்றியதோ?

  இதைப் படித்ததும் என் நினைவிற்கு சட்டென்று
  வந்தவர்கள் இரண்டு பேர்.
  வெளுத்ததெல்லாம் பால் என்று நினைக்கும்
  என் மனைவியும், ஒரு தோழியும் தான்.

  உடனே அவர்களுக்கு இதைப் பற்றி விலாவரியாக
  சொல்லி எச்சரித்து விட்டேன்.

  சேவியர் அவர்களுக்கு நன்றி.
  //

  நன்றி நண்பரே… உங்கள் பின்னூட்டம் கட்டுரை எழுதியதை நியாயப்படுத்துகிறது !

  Like

 18. நல்ல தகவல் ஆனால் அந்த மாதிரி மருந்துகள் பெயர்கள் வேண்டாமே !!

  Like

 19. மிக்க நன்றி

  முக்கியமாக பெண்கள் இத்தகைய இணையதளத்தை பயன்படுத்தி கொள்ளவேண்டும். பெண்களிடம் உள்ள தவறு சுலபமாக மயங்குவதுதான். பெண்கள் ஒரு ஆணிடம் பழகும் போது அதை முறையாக வைத்துக்கொள்ளுங்கள். அதை விட்டுவிட்டு அவன் கூப்பிட்டான் நான் போனேன் என்று சொல்லுவது மிக கேவலமாக இருக்கிறது. இன்றைய நிலையில் படித்த பெண்களைவிட படிக்காத பெண்கள் மிக பாதுகாப்பாக உள்ளார்கள். படித்த பெண்கள் ஏமாந்து விட்டு பிறகு தற்கொலைக்கு முயல்கிறார்கள். பெண்களே எத்தகைய ஆணாக இருந்தாலும். அளவுக்கு மீறி போகதேர்கள். இன்றைய காதலர்களும் அப்படிதான். காதலனோடு சுற்றுவது, இறுதியில் அவன் கதை முடிந்ததும் அவன் சென்றுவிடுவான். பிறகு ஆண்களுக்கு அவமானம் அல்ல பெண்களே உங்களுக்குத்தான். காதல் என்பது எதற்கு என்று இன்னும் தெரியாமல் காதலித்து கொண்டுதான் இருக்கிறார்கள். காதல் என்பது கல்யாணம் முடிந்தவுடன் முடிவது அல்ல. அது வாழ்கையின் இறுதி கட்டம் வரை எந்தவித பிரச்சனையும் இல்லாமல் இருபதுற்குதான் காதல் உதவுமே தவிர, உடம்புக்காக அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுவதற்கு மட்டுமே காதல் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

  பெண்களுக்கு மட்டும்:
  புடவை வாங்கும்போது மட்டும் பார்த்து பார்த்து வாங்குகிறீர்கள்.
  ஆனால் வழக்கையை மட்டும் தொலைத்து விட்டு நிற்கீரீர்கள்.

  மக்கள் நலம் விரும்பி.
  kumarmvasanth@gmail.com

  Like

 20. ஆனந்த், அப்போ தான் அந்த பேரை யாரும் ஏமாத்தி கூட தர முடியாது இல்லையா 🙂 சமாளிப்பு ஓ.கே வா ?

  Like

 21. nanti, sirantha padhivu; but varum mun kaakka thantha tips il MADHU VIRUNTHUKU SELLUM PODHU ARAVE KUDIPPAZHAKAM ILLADA NABARAI AZHAITHU SELLA VENDUM; entu solkireerkale? why? avarum kudikaran aakanuma?

  Like

 22. கன்னாபின்னான்னு கேள்வி கேக்கறீங்களே.. ஒரு பாதுகாப்புக்குன்னு சொன்னேன் 😉

  Like

 23. arumaiyana tagaval….oosi iadam kodukaamal nool nulaivathillai ..100 ill oru varii…malaysiavil ariyama nadanthu vidathu enum varthaiku idam illai…aanenna pennena yellam orr inamtaan….teriyathavarkal terinthu kollatume saravana….

  Like

 24. கண்டிக்க வேண்டியது:
  ‘டேட் ரேப்’ மருந்துகளைக் காட்டிக்கொடுத்து இதே தவறு செய்யக்கூடியோருக்கு மறைமுகமாக உதவியது.
  மேலும் சேர்க்கவேண்டியது முதலில் மருந்துக்களின் பெயர்களை எடிட் செய்து நீக்குங்கள்

  Like

 25. திருமணமாகாமல் ஆணும் பெண்ணும் தனித்திருப்பது தடுக்கப்பட்டது – இஸ்லாம்

  Like

 26. Very nice.anaithu pengalaiyum mathika vendum.athu vesiyaka irunthalum.pengal ammavaga,sister-aka palliel tholiyaka manaiviyaka namathu magalaka irukum pothu undagum paathippu anaiverukum onre.

  Like

 27. i absolutely agree with mr.saravanan god has given wonderful wisdom to females. once if they decide they will go upto any extent. we cant say pavam they sliped without knowing one starring is enough for them to asses man’s quality. thats what they live with old and with even boys

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s