பல் துலக்காதீங்க !!!

( ஹைய்யா… ஜாலி )

ஒவ்வொரு முறையும் ஏதேனும் சாப்பிட்டபின் பல் துலக்கவேண்டும் என குழந்தைகளுக்குப் போதிக்கிறீர்களா ? ஒரு நிமிடம் நில்லுங்கள். இந்த மருத்துவத் தகவலைப் படியுங்கள்.

ஒவ்வொரு முறை உணவு அருந்தியபின்னும் பல் துலக்குவது பல்லுக்கு ஆபத்து என்கிறது இந்த புதிய மருத்துவ ஆய்வு.

நாம் உண்ணும் உணவிலோ, குடிக்கும் பானத்திலோ உள்ள அமிலத் தன்மை பல்லிலுள்ள எனாமலை இளகும் நிலைக்கு ஆளாக்கும் என்றும், அந்த நேரத்தில் பல் துலக்கினால் அந்த எனாமல் கரைந்து விடும் வாய்ப்பு உண்டு எனவும். அது பல்லை பலவீனப்படுத்திவிடும் எனவும் படிப்படியாக விளக்குகிறது இந்த ஆய்வு.

பல்லைப் பாதுகாக்க அமிலத்தன்மை மிகுந்த உணவுகளை (உதாரணம் : குளிர்பானங்கள் ) உண்பதைத் தவிர்க்க வேண்டும், கூடவே அடிக்கடி பல் துலக்குவதையும் விட்டு விட வேண்டும் என்கிறது அந்த ஆய்வு.

இந்த ஆய்வுக்கு பள்ளிக்கூட குழந்தைகளை உட்படுத்தினார்கள். அவர்களில் 53 விழுக்காடு பேருடைய பல் வலிவிழந்தே காணப்பட்டதாம். அதற்குக் காரணம் உணவு உண்டவுடன் பல் துலக்குவது தான் என்கின்றனர் மருத்துவர்.

எனவே, பல் துலக்குவதை வகைப்படுத்துங்கள். உணவு உண்டபின் உடனே பல் துலக்குவதை விட்டு விடுங்கள். அதிகாலையில் பல் துலக்கலாம். இரவு உணவு உண்டு கொஞ்ச நேரத்துக்குப் பின் பல் துலக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

14 comments on “பல் துலக்காதீங்க !!!

  1. சும்மாசும்மா பல்துலக்கினா பல்லு தேயாதா என்ன? சரிதானே?
    அன்புடன்
    கமலா

    Like

  2. இங்கே சுவிஸில் பவுணை விடப் பல்லுக்குத்தான் மவுசு அதிகம்.ஒரு தரம் பல்லை”ஈ”என்று காட்டப் போனாலே இரண்டு பவுண் வாங்கிற பணமுங்கோ.அதனால் பல்லுக்குப் பாதுகாப்பு அதிகம்.நாய் பூனையெல்லம் பல் விளக்குதா என்று கேட்டாலும் ஒத்துக் கொள்கிறார்கள் இல்லை.

    Like

  3. //ஒரு நிமிடம் நில்லுங்கள். இந்த மருத்துவத் தகவலைப் படியுங்கள்.//

    நின்னுட்டேன் படிச்சிட்டேன்… ஓ அதான் உங்க பல்லு ரொம்ப வெள்ளையா இருக்கோ… சரி…. சரி….

    Like

  4. //அதிகாலையில் பல் துலக்கலாம். இரவு உணவு உண்டு கொஞ்ச நேரத்துக்குப் பின் பல் துலக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.//

    கனவில் பல் துலக்கிவிட்டால் இந்தக் கணக்கில் கழித்துக் கொள்ளலாம்… 🙂

    Like

  5. ///
    கனவில் பல் துலக்கிவிட்டால் இந்தக் கணக்கில் கழித்துக் கொள்ளலாம்…
    ///

    அடப் பாவி, அப்போ கனவில சாப்பிட்டாலும் எந்திரிச்சி கொஞ்சம் நேரம் கழிச்சு பல்லு வெளக்கனுமேடா!!!

    Like

  6. //ஒவ்வொரு முறை உணவு அருந்தியபின்னும் பல் துலக்குவது பல்லுக்கு ஆபத்து என்கிறது இந்த புதிய மருத்துவ ஆய்வு.
    //
    ஆமா, ஒவ்வொரு முறை உணவு அருந்தியபின்னும் பல் துலக்குறாங்களா என்ன?
    பாதி வாழ்நாளும் பல் துலக்கியே கழிந்துவிடுமே.

    Like

  7. //சும்மாசும்மா பல்துலக்கினா பல்லு தேயாதா//

    ஆமாமா.. எறும்பு ஊரக் கல்லும் தேயும் ன்னு சொல்லுவாங்க. கல்லுக்கே அந்த நிலைன்னா .. பல்லுக்கு 😀

    Like

  8. //இங்கே சுவிஸில் பவுணை விடப் பல்லுக்குத்தான் மவுசு அதிகம்.//

    பல்லு போனா, சொல்லு போச்சு.. அதான் ::)

    //ஒரு தரம் பல்லை”ஈ”என்று காட்டப் போனாலே இரண்டு பவுண் வாங்கிற பணமுங்கோ.//

    ஐயையோ.. வாயை கொட்டாவி விடக் கூடத் திறந்துடாதீங்க 😉

    Like

  9. //கனவில் பல் துலக்கிவிட்டால் இந்தக் கணக்கில் கழித்துக் கொள்ளலாம்…

    //

    கனவுல வேலை பாத்து ஆபீஸ்ல போய் சம்பளமும் வாங்கலாமா ? :/

    Like

  10. //அடப் பாவி, அப்போ கனவில சாப்பிட்டாலும் எந்திரிச்சி கொஞ்சம் நேரம் கழிச்சு பல்லு வெளக்கனுமேடா!!!

    //

    கனவுல கூடவா உனக்கு சாப்பிடணும் ???

    Like

  11. //ஆமா, ஒவ்வொரு முறை உணவு அருந்தியபின்னும் பல் துலக்குறாங்களா என்ன?
    பாதி வாழ்நாளும் பல் துலக்கியே கழிந்துவிடுமே.
    //

    ம்ம்.. வாழ்க்கைல எவ்ளோ நேரம் நீங்க சாப்பிட செலவு பண்றீங்கன்னு சொல்லாம சொல்றீங்க 😉

    Like

  12. //நின்னுட்டேன் படிச்சிட்டேன்… ஓ அதான் உங்க பல்லு ரொம்ப வெள்ளையா இருக்கோ… சரி…. சரி….

    //

    என் பல்லு ???

    Like

Leave a comment