ஐயா vs அய்யா : இது அரசியல் பதிவல்ல !

 

tamilஇன்று தாம்பரம் நோக்கி வந்து கொண்டிருந்தபோது வழி நெடுகிலும் பார்க்க முடிந்தது எங்கும் எதிலும் “அய்யா” மற்றும் “சின்ன அய்யா” வாசகங்கள்.

ஐயா என்று அழைப்பது பிழை என்று கருதி “அய்யா” என அழைக்கிறார்களா என்பது புரியாமல் குழம்பியதால்,
கூடவே பயணித்த நண்பனிடம் என் சந்தேகத்தைக் கேட்டேன்.

“ஒருவேளை நேமாலஜியாய் இருக்குமோ” என எனக்கு ஒரு கேள்வியையே பதிலாய் சொல்லி மேலும் குழப்பத்திலாழ்த்தினான்.  ( ஐயா படம் எடுத்த ஹரியிடம் கேட்டிருக்க வேண்டுமோ ? )

சின்ன வயதில் “ஐ” என்னும் வார்த்தை சுத்த உயிரெழுத்து, மெய்யாலுமே மெய் கலக்காதது என்றெல்லாம் பெருமையாய் படித்திருக்கிறேன். அந்த ஐ –க்கு இப்படி ஒரு நிராகரிப்பு நிகழ்ந்து விட்டதே என எனது ஐ கலங்கி கண்ணீர் வந்து விட்டது. அய்!!!!

அப்புறம் எனக்குள் ஒரு “ஐ”(அய்?)யம் எழுந்தது.

ஒருவேளை “ஐ” என்பது “ஜ” போல தோன்றுவதால் இதுவும் வடமொழிச் சொல் என நினைத்தார்களோ தமிழ் ஆர்வலர்கள் ? 

போன் கிடைத்தால் மக்கள் தொலைக்காட்சி தமிழ் அறிஞரிடம் கேட்டுப் பார்க்க வேண்டும்.

காலையிலிருந்து ஐ(அய்?)ந்து மணி வரை யோசித்தும் ஒன்றும் பிடிபடாததால் வலையுலக தமிழ் தலைகளிடம் கேட்கலாம் எனும் யோசனையில் இங்கே பதிவிடுகிறேன்.

ஐயிரண்டு என்பது பத்து என்பது மாறி இப்போது ஐ-இரண்டு மீன்ஸ் கண் இரண்டு தானே என பதின் வயதுகள் கேட்கும் காலம் இது. ஐயய்யோ …. இருக்கிற ஒரு ஐயும் போகுமோ எனும் கவலையும் எழாமல் இல்லை 🙂

எனினும், போஸ்டர் அடிக்கும் நண்பர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள். கவனமாக எழுத்தை அடியுங்கள். குறில் நெடிலை கவனத்தில் கொள்ளுங்கள். !

25 comments on “ஐயா vs அய்யா : இது அரசியல் பதிவல்ல !

  1. ஐயா… அய்யா… நல்ல அறிவு பூரணமான சிந்தனை:) மருத்துவர் ஐயா/அய்யா இதற்கு பதில் விளக்கம் சொல்லியே ஆகவேண்டும்

    Like

  2. “தமிழிலிருந்து “ஐ”-ஐ எடுத்துவிட்டால் பூனை எண்பதை எப்படி எழுதுவார்கள்…??? “பூன் அய்” எண்றா….?? , ஐ (அய்) , ஔ (அவ்) – dipthongs என்பர் மொழியியலில். தொல்காப்பியம், சங்க இலக்கியத்திலேயே உள்ள அவற்றை நீக்குதல் தீமை தரும்.

    எ.கா:- “ஆடகப் பெரு நிறை ஐ-ஐந்து இரட்டி,தோடு ஆர் போந்தை வேலோன், ‘தன் நிறை” சிலப்பதிகாரம்:27:174-175

    மேற்சொன்னக் காட்டுகளில், “ஐ” வரும் இடங்களில் “அய்” என்று போட்டால் ஒன்றும் பிழை நேர்ந்து விடவில்லை. ஆனால் ஒவ்வொரு “அய்” யும் ஒரு மாத்திரையை விழுங்கி விடுவதைக் காணமுடிகிறது. இலக்கணப்படி, ஐ என்பது நெடில். அது தனித்து ஒலிக்கையில்
    இரண்டு மாத்திரை பெறும். சொல்லின் முதல், இடை, கடையில் சேர்ந்து வரும்போது குறுகி ஒரு மாத்திரைபெறும் (ஐகாரக் குறுக்கம்).ஆக, ஐ என்று எழுத்து சொல்லாகத் தனித்து நிற்கையில் அதன் இரண்டு மாத்திரை ஒலிப்பை “அய்” என்று எழுதிக் கெடுத்து விடுகிறோம் என்று என்னால் உணரமுடிந்தது.”

    சேவியர் சார், இத நான் சொல்லல.. அதனால சந்தேகம் இருந்தா இவருகிட்ட கேளுங்க சரியா? http://nayanam.blogspot.com/2008/05/blog-post.html

    உங்க பதிவ படிச்சிட்டு வழக்கப் படி Google-ல்ல தேடினதால எனக்கு கெடச்சது…

    Like

  3. Hello Xavier,

    Nice post. I think this is a continuation of the tamil script reforms suggested by Periyar. If I remember correctly, this usage was first brought about by Dravidar Kazhagam in their daily Viduthalai. The line of reasoning was the same along Periyar’s thoughts who wanted to remove redundancies in tamil script. When the traditional uyir ezhtuthu ‘ai’ can be replaced by a combination of another uyir ezhuthu and consonant, we have one less letter to worry about. The same can be said about the uyir ezhtuthu ‘au’ as in the word Avvaiyaar. So, we now have two letters less in the uyir ezthuthu without making a phonetic compromise. There are many more suggestions as well, but they haven’t come into use as yet. I have uploaded a video for you where these things are explained. There is a video prepared by periyar webvision around a year ago which explains why we need the tamil script reform, but unfortunately, I couldn’t find it in their website now. So, I have uploaded the video in a commercial file hosting server as an flv file. Here is the link.

    http://www.sendspace.com/file/klql09

    If you are interested, please go through it. Thanks.

    R. Jayaprakash.

    Like

  4. “போன் கிடைத்தால் மக்கள் தொலைக்காட்சி தமிழ் அறிஞரிடம் கேட்டுப் பார்க்க வேண்டும்.” //

    போன் கிடைத்தாலா இல்லை நேரம் கிடைத்தாலா? 🙂 அல்லது நான் புரிந்து கொண்டது தவறா

    Like

  5. ஐயன்மீர், உங்கள் ஐயம் கி’டை’க்கப்பெற்றது. ஐயம்திரிபற உங்கள் கருந்து ஏற்பு’டை’தே.ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமு’றை’ பதவிக்கு வரும் எங்களுக்கு உங்கள் ‘ஐ’ பிரச்சனை ஒரு ‘ஆய்’ப்பிரச்ச’னை’ தான். இ’தை’யெல்லாம் நாங்கள் கண்டு கொள்ள மாட்டோம். வேண்டுமானால் ‘அய்’ என்று எழுதினால் வார்த்’தை’க்கணக்கில் வாங்கும் சுவரெழுத்துக்கார்ரகள் எழுத்துக்கணக்கில் பெயிண்ட் கொள்’ளை’ அடிக்கிறார்கள் என்று புகார் கொடுத்துப்பாரும். பொதுக்குழு கூடி முடி’வை’ எடுக்கும்.

    Like

  6. nanga ellam kolgaiyai pathiya kavalaipada matom…
    kuril nedilla pathiya kavaliapada mudiyum , kasu onnu than enga kavalaiye…..
    – Poster adikum Pamaran

    Like

  7. //nanga ellam kolgaiyai pathiya kavalaipada matom…
    kuril nedilla pathiya kavaliapada mudiyum , kasu onnu than enga kavalaiye…..
    – Poster adikum Pamaran

    //

    வால்கோ நாட்டோடீ 🙂

    Like

  8. //போன் கிடைத்தாலா இல்லை நேரம் கிடைத்தாலா? அல்லது நான் புரிந்து கொண்டது தவறா//

    நேரம் கிடைத்து, போன் போட்டு மறு முனையில் தொடர்பு கிடைத்தால் 😀

    Like

  9. வி.கோ: ஐயாத்தொர நீ பல்லாண்டு வாழனும் ஐயாத்தொர….

    சேவியர்: தொர தொரன்னு சொல்றியே, நீ என்ன ஷாப்பிங் காம்ப்ளெக்சா கட்டி வச்சிருக்கே, ரிப்பன் வெட்டி தொரக்கறதுக்கு…

    Like

  10. //வி.கோ: ஐயாத்தொர நீ பல்லாண்டு வாழனும் ஐயாத்தொர….

    சேவியர்: தொர தொரன்னு சொல்றியே, நீ என்ன ஷாப்பிங் காம்ப்ளெக்சா கட்டி வச்சிருக்கே, ரிப்பன் வெட்டி தொரக்கறதுக்கு…
    //

    நல்லா தான் இருக்கு கொக்கோகம் 😀

    Like

Leave a comment