குசேலன் : பாடல்கள் எப்படி ? விரிவான அலசல்.

1. பேரின்பப் பேச்சுக்காரா

“சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா” ஒரு காலத்தின் பட்டி தொட்டியெல்லாம் பட்டையைக் கிளப்பிய பாடல். அதே போல எழுத முயன்ற யுகபாரதியின் பாடல் இது.

பேரின்பப் பேச்சுக்காரன் – எனும் வார்த்தைப் பிரயோகம் வசீகரித்த அளவுக்கு பாடல் வசீகரிக்கவில்லை. துதி பாடும் வளையத்துக்குள் விழுந்து விட்ட நண்பர் யுகபாரதியைக் கேட்டால் காலத்தின் கட்டாயம் என சொல்லக் கூடும். ஆங்காங்கே “ஆண்களின் அரசாங்கம்” என்றெல்லாம் சற்றே வசீகரிக்க முயன்று ஒரு பாடலாசிரியராகத் தோற்றிருக்கிறார் யுகபாரதி. ஒருவேளை ரசிகர் மன்ற கூட்டங்களுக்குப் பயன்படக் கூடும் இந்தப் பாடல்.

எனினும் “பேருந்தில் நீ எனக்குச் சன்னலோரம்” என வசீகரித்த யுகபாரதியின் எந்த ஒரு சுவடும் இல்லாமல் தலை கவிழ்கிறது இந்தப் பாடல்.
2. சினிமா சினிமா

வாலி எழுதியிருக்கிறாராம். ரஜினி மேலே ஏதோ கோபம் போல. கொருக்குப்ப்பேட்டை ரஜினி குமாரிடம் கொடுத்தால் இதை விடப் பிரமாதமாக ஒரு “போஸ்டர்” கவிதை எழுதுவார்.

என்னாச்சோ தெரியவில்லை. ரஜினிக்கு பாடல் எழுதும்போது மட்டும் அனுபவக் கவிஞர்கள் கூட அகல பாதாளத்தில் விழுந்து விடுகிறார்கள்.

கவித்துவமும், கவனிப்புகளும் இல்லாமல் வெறுமனே தினத்தந்தியில் ரஜினிக்கு எழுதப்பட்ட  வாழ்த்துச் செய்தியை வாசிப்பது போல இருக்கிறது பாடலும் இசையும்.

பாட்டாளிகளின் பனியனை கவனி
பள்ளிப் பிள்ளைகள் பையிலே கவனி

3. ஓம் சாரரா…

இதுவும் வாலியில் கற்பனைக் குழந்தையே. இதுவும் குறைப் பிரசவ கேஸ் தான். இந்தப் பாடலுக்கு வரிகள் ரஜினிகாந்த் என்று சொல்லலாம். அப்புறம் என்ன எல்லா ரஜினி படத்தையும் வரிசைப்படுத்திய பணி மட்டுமே வாலியுடையது. செங்கல் அடுக்கியபின் ஆங்காங்கே சாந்து பூசும் வேலை போல.

சில காதல் வரிகள் எழுதியிருக்கிறார். லோ – பட்ஜெட் என்றால் பாடலின் தரமும் லோ – வாக இருக்க வேண்டும் என நினைத்தாரோ என்னவோ. போகிற போக்கில் அவசர கோலத்தில் ஏதோ வரைந்து விட்டு போயிருக்கிறார்.

என்னவோ மாயம் செய்து என்னைக் கவிழ்த்தாயே” என்பன போன்ற வரிகளைத் தானா ரஜினிக்காய் வைத்திருக்கிறீர் !!! வாலி நியாயமா ?
4. சாரல்..

நயந்தாரா ஆடிப்பாடும் பாடல் என நினைக்கிறேன். “சின்ன சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்போமா ?” என அசத்திக் காட்டிய வைரமுத்துவும், “செல்ல மழையே …” என மழையில் ரசிக்க வைத்த நா.முத்து வும் போல தானும் ஒரு அழியாத பாடல் எழுதவேண்டும் என ஆசைப்பட்ட கவிஞர் கிரித்தயாவின் கனவு இந்தப் பாடல்.

வெள்ளி மழை, கிள்ளி விட்டது – என்றெல்லாம் பாடல் எழுதினால் அந்தப் பட்டியலில் சேர முடியாது என்பதை கவிஞர் உணர்ந்து கொள்தல் நலம். மழையைப் பற்றி எழுதும் போது காகிதக் கப்பல், நனைதல், சாரல், தூறல், மயில், தவளை இவற்றைத் தவிர வேறு எதையும் கற்பனை செய்ய முடியாத பாடல் எப்படி நிலைக்க முடியும் ?

இசையிலும் பாடல் வரிகளிலும் எதிலுமே நிறைவு தராத பாடல். ஒருவேளை காட்சிப் படுத்தல் நன்றாக இருக்கலாம்.

5 சொல்லம்மா

பா.விக்கும் ஒரு வாய்ப்பு இந்த படத்தில் பாடல் எழுத. இசையையும் பாடல் வரிகளையும் பொறுத்தவரையும் கொஞ்சமேனும் நிறைவு தரும் பாடல் இது ஒன்றே. “இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சக்கரை” என்றோ “மூக்கில்லா ராஜ்யத்து முறி மூக்கன் ராஜாவு” என்றோ உங்களுக்குப் பிரியமான மொழியில் இதை புரிந்து கொள்ளலாம்.

பல மாடி வீட்டில் வெகுமதி இருக்கும்
ஏழை வீட்டில் நிம்மதி இருக்குமடி

இசை

ரஜினியின் திரைப்படத்துக்குச் சற்றும் தகுதியில்லாத இசை. இரைச்சலையும், தெளிவின்மையையும், முரட்டுக்காளை காலத்து ராகங்களையும் வைத்துக் கொண்டு தேவையற்ற பில்டப்களைக் கொடுத்த இசையமைப்பாளரை ரசிகர்கள் “கவனித்துக்” கொள்ளட்டும்.

மொத்தத்தில்

சன் தொலைக்காட்சியில் சொல்வது போல ஒரு வரியில் இசை விமர்சனம் சொல்ல வேண்டுமெனில்

குசேலன் – உண்மையிலேயே பரம ஏழை.

35 comments on “குசேலன் : பாடல்கள் எப்படி ? விரிவான அலசல்.

  1. நான் இரைச்சல் வர்றது என்னோட ஸ்பீக்கர் ப்ரோப்ளம்’ன்னு நினைச்சிட்டு இருந்தேன். ஓ! பாட்டே அப்படிதானா?

    Like

  2. ஓ.. ஒருவேளை என்னோட ஸ்பீக்கரும் அவுட் ஆச்சா தெரியலையே 😀

    குறிப்பு : உங்க பதிலை நான் ரொம்பவே ரசித்தேன் 🙂

    Like

  3. i think u r mad… u don’t have music knowledge.. and u don’t know tamil alsooo… go and learn first then write a review… its looks u r kamal fan… crazyyy guy u r… tc… bye… we like rajini.. my akka paiyan also like rajini… mhmmm…

    Like

  4. என் சிற்றறிவுக்கு எட்டிய கவித்துவ அறிவை வைத்து உதாரணங்களுடன் எழுதியிருக்கிறேன் மதுமிதா1 அவர்களே.

    உங்கள் விமர்சனத்தை நீங்களும் உதாரணங்கள், பிடித்த வரிகள் போன்றவற்றுடன் விளக்கினால் உங்கள் அறிவின் ஆழத்தை அறியக் கிடைத்த வாய்ப்பாகக் கருதி உங்களுக்காக ஒரு பாடலும் பாடுவேன் “குசேலன்” ரேஞ்சுக்கு 🙂

    அப்படியே… உங்களை மாதிரி “தீ” விர ரஜினி பிரியர்களுக்காக ஒரு கவிதையும் எழுதியிருக்கேன். http://xavi.wordpress.com/2006/06/15/rajini/

    படிச்சு பாருங்களேன், கோபம் குறையும் 😉

    Like

  5. எங்கவீட்டு ஸ்பீக்கரும் குசேலன் படப்பாடலுக்கு மட்டும் அவுட் ஆகிவிடுகிறது என்பதை சொல்லிக்கிறேன்பா….

    Like

  6. Very well said. Madumitha, your statements speaks volume about your musical knowledge, which is next to nothing.

    Like

  7. i downloaded the songs and heard it and felt the same iraichal initially.. then i bought the cds and listened to them and i found songs r not great.. but are good.. they are not as catchy as Sivaji or other rajini movies.. but it is still good..not so bad as you have mentioned.. yes.. taste differs 🙂

    saaral song is good.. i liked it..

    Like

  8. hahaha,

    //
    i think u r mad… u don’t have music knowledge.. and u don’t know tamil alsooo… go and learn first then write a review… its looks u r kamal fan… crazyyy guy u r… tc… bye… we like rajini.. my akka paiyan also like rajini… mhmmm…//

    Akka Paiyannukkhha, thiyagga semmal aahi, Kuselan songs super nnu sollittnggalle madumitha !

    Like

  9. ///மூக்கில்லா ராஜ்யத்து முறி மூக்கன் ராஜாவு///

    ஈ லோகத்தில் ஒரு வல்லிய ஆள் உண்டெங்கில் அது நம்மட சேவியரானு. சேவியர், நின்களுடே பிரயத்தனங்கள் வளர நன்னாயிட்டுண்டு.

    Like

  10. I just bought this audio cd with lots of expectations today after seeing the audio release function ..god..annoying…irritating…total junk..even recording quality is like mono radio…

    Like

  11. i think u r mad… u don’t have music knowledge.. and u don’t know tamil alsooo… go and learn first then write a review… its looks u r kamal fan… crazyyy guy u r… tc… bye… we like rajini.. my akka paiyan also like rajini… mhmmm…///
    தோடா இந்த லொள்ள பாரன்.
    நீங்க காமடி கீமடி பண்ணல தானே?

    Like

  12. //i found songs r not great.. but are good.. they are not as catchy as Sivaji or other rajini movies.. but it is still good..not so bad as you have mentioned.. yes.. taste differs //

    நன்றி மனதின் ஓசை. ஒருவேளை என்னுடைய எதிர்பார்ப்புகள் அதிகமாய் இருந்திருக்கலாம் 🙂

    Like

  13. //ஈ லோகத்தில் ஒரு வல்லிய ஆள் உண்டெங்கில் அது நம்மட சேவியரானு. சேவியர், நின்களுடே பிரயத்தனங்கள் வளர நன்னாயிட்டுண்டு.//

    ചേട്ടന്‍ മലയാളം നല്ലവണ്ണം സംസാരിക്കുന്നു. അടി പൊഴി

    Like

  14. ///
    ചേട്ടന്‍ മലയാളം നല്ലവണ്ണം സംസാരിക്കുന്നു. അടി പൊഴി
    ///

    இதுக்கு என்ன அர்த்தம், சூர்யா டி.வி. சீரியலை வச்சு இப்போ தான் பேசவே ஆரம்பிச்சிருக்கேன். நீங்க பாட்டுக்கு கூகுள் ட்ரான்ஸ்லிட்டரேஷன்ல டைப் பண்ணி போட்டிங்கன்னா எனக்கு என்ன தெரியும்? இதையும் தமிழ்ல மாத்தி போடுங்க ப்ளீஸ்…

    Like

  15. //கூகுள் ட்ரான்ஸ்லிட்டரேஷன்ல டைப் பண்ணி போட்டிங்கன்னா எனக்கு என்ன தெரியும்?//

    அங்கேயே இதை மாத்தி படிச்சுக்கலாமே 😉

    சேட்டன் மலையாளம் நல்லவண்ணம் சம்சாரிக்குந்நு.. அடி பொழி…

    – இவ்ளோ தான் மேட்டர் 😀

    Like

  16. //சேட்டன் மலையாளம் நல்லவண்ணம் சம்சாரிக்குந்நு.. அடி பொழி… //

    அது அடி பொழி அல்ல அடி பொளி

    Like

  17. Pingback: கில்லி - Gilli » Blog Archive » Kuselan Music Reviews

  18. though the songs are not to rajni’s range,they are not very bad…..they are also not above average nor below average….

    Like

  19. இன்னும் பாடல்கள் கேட்கல.. CD வாங்கலாமா, வேணாமான்னு தெரியல..எப்டி இருந்தாலும் FMல போட்டுடப் போறாங்க!

    Like

  20. //though the songs are not to rajni’s range,they are not very bad…..they are also not above average nor below average….

    //

    ஐயா பாலாஜி.. என்ன சொல்ல வரீங்க ? 🙂

    Like

  21. //இன்னும் பாடல்கள் கேட்கல.. CD வாங்கலாமா, வேணாமான்னு தெரியல..எப்டி இருந்தாலும் FMல போட்டுடப் போறாங்க!

    //

    எஃ. எம் கூட பெருசா கண்டுக்கல. அப்பப்போ ஒரு பாட்டு போடறாங்க. 😉

    Like

  22. ஏம்பா ! அறுபது வயது (!) இளைஞர் ரஜினி, 20 வயது நயன தாராவோடு ஆடுவதை நினைத்து பார்க்கவே முடியலே ! இதுல பாட்டு எபபடி இருந்தா என்ன ?

    Like

  23. சேவியர் அவர்களே ! சினிமாவில் நீங்கள் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் அல்லவா ? நடிகர் சிவாஜி அவர்களின் நாடக வசனங்களை எங்கு பெறலாம். ம்யூசிக் வோல்ட்டில் எல்லாம் விசாரித்து ஆகிவிட்டது !!!. இணையத்திலும் தேடி விட்டேன் (பாரசக்தி, கட்டபொம்ம்ன் மட்டுமே கிடைக்கிறது).

    Like

  24. //ஏம்பா ! அறுபது வயது (!) இளைஞர் ரஜினி, 20 வயது நயன தாராவோடு ஆடுவதை நினைத்து பார்க்கவே முடியலே ! இதுல பாட்டு எபபடி இருந்தா என்ன ?//

    அறிவுடை நம்பி, இதையெல்லாம் ஏன் நினைச்சுப் பார்த்துட்டே இருக்கீங்க. விட்டுடுங்க 😉

    Like

  25. //சினிமாவில் நீங்கள் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் அல்லவா ?//

    கிளம்பிட்டான்யா.. கிளம்பிட்டான்யா..
    இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே…

    இப்படியெல்லாம் நிறைய பதில்கள் உண்டு உங்கள் இந்த கேள்விக்கு.

    // நடிகர் சிவாஜி அவர்களின் நாடக வசனங்களை எங்கு பெறலாம்.//

    ராஜ் வீடியோ விஷனில் கொஞ்ச வருடங்களுக்கு முன்பு சில பழம் பெரும் நாடகங்கள் வாங்கினேன். மேலும் விவரங்களுக்கு பழத்தை கூடை கூடையாய் தின்று கொட்டையை வண்டி வண்டியாய் போட்டுக் கொண்டிருக்கும் இந்த அண்ணாத்தேயை அணுகவும்.

    அண்ணாத்தே முகவரி http://ennam.blogspot.com/

    Like

  26. XAVIER…

    RAJINI MOVIE MUSIC ALWAYS NOT GOOD UNTIL MOVIE RELEASE. YOU HAVE TO GIVE YOUR REVIEW AFTER MOVIE RELEASE.

    AM SURE AFTER SEEING SONGS IN SCREEN YOU WILL SURPIRSE.

    BUT GREAT KAVITHAI YOU HAVE WRITTEN. THANKS FOR THAT.

    Like

Leave a comment