ஆடையா ? அப்படீன்னா என்ன ?

உலகெங்கும் காடுகளை நாகரீக மனிதன் அழித்து வருவதால் பல பழங்குடி இனமே அழியும் அபாயம் இருக்கிறது என கவலை தெரிவிக்கிறார் உலக பழங்குடியினர் பாதுகாப்புக் குழுவான Survival International குழுவின் இயக்குனர் ஸ்டீபன் கோரி.

 

இதுவரை வெளி உலகத்தோடு சற்றும் தொடர்பே இல்லாத சுமார் நூறு பழங்குடி இனமாவது உலகில் நிச்சயம் உண்டு என அடித்துச் சொல்கிறார் அவர். இவற்றில் பாதி இனம் பிரேசில் மற்றும் பெரு நாட்டை ஒட்டிய பகுதிகளில் இருப்பதாக கருதப்படுகிறது.

 

உலகின் அடர்ந்த காடான அமேசான் காட்டுப் பகுதியின் மேல் பறந்த ஒரு விமானத்திலிருந்து வியப்பூட்டும் ஒரு பழங்குடி இனத்தைப் புகைப்படம் எடுத்திருக்கிறார்கள். இந்தப் புகைப்படத்தில் காணப்படும் மக்கள் உடலெங்கும் சிவப்பு மற்றும் கருப்பு வண்ணம் பூசியபடி வானத்தைப் பார்த்தபடி நிற்கின்றனர்.

விலங்குகளை மட்டுமே வேட்டையாடிப் பழக்கப்பட்ட இவர்கள் வானத்தில் பறந்த விமானத்தைக் கண்டு மிகப்பெரிய பறவை என நினைத்திருக்களோ, அல்லது அழிக்க வந்த சாத்தான் என நினைத்தார்களோ தெரியாது ஆனால் தங்களிடமிருந்த அம்பையும் வில்லையும் எடுத்து விமானத்தின் மீது எய்யத் தயாராகிவிட்டனர்.

 

இந்தக் காட்சி ஒன்றே இந்த பழங்குடியினர் வேறு எந்த இடங்களோடும் எந்தத் தொடர்பும் இல்லாமல் இருக்கிறார்கள் என்பதன் ஆதாரமாகும். விலங்குகளைப் பிடிப்பதற்குரிய கவனத்துடன் குனிந்த நிலையில் அதீத எச்சரிக்கை உணர்வுடன் சிலர் வானத்தைப் பார்ப்பதும் இந்த புகைப்படங்களில் பதிவாகியுள்ளது.

 

Survival International  குழுவின் ஜோஸ் கார்லோஸ் எனும் உறுப்பினர் இதுகுறித்து, நாகரீகம் எனும் பெயரில் நாம் செய்து வரும் தன்னலமான செயல்களினால் இத்தகைய ஒரு பூர்வீக இனமே பாதிப்புக்கு உள்ளாவது வருத்தத்துக்குரியது, என குறிப்பிடுகிறார். இத்தகைய பழங்குடியினருக்கு இருக்கும் வாழும் உரிமையை நாம் அவர்களுடைய வாழ்க்கைச் சூழலை சேதப்படுத்தாமலும், வாழும் சூழலை அழிக்காமலும் இருப்பதன் மூலம் நிலைநாட்டவேண்டும் வேண்டும் எனவும் இந்த குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

22 comments on “ஆடையா ? அப்படீன்னா என்ன ?

 1. பழைமைகள் அழிந்து கலாசாரங்கள் குறைந்து நாகரீகங்களின் அவஸ்தைகளுக்குள் வாழ்வதை விட அவர்களோடு வாழ்வது எனக்குப் பிடிக்கும்.சந்தர்ப்பம் கிடைத்தால் அப்படியான இடங்களுக்கே போகப்போகிறேன்.

  Like

 2. //பழைமைகள் அழிந்து கலாசாரங்கள் குறைந்து நாகரீகங்களின் அவஸ்தைகளுக்குள் வாழ்வதை விட அவர்களோடு வாழ்வது எனக்குப் பிடிக்கும்.சந்தர்ப்பம் கிடைத்தால் அப்படியான இடங்களுக்கே போகப்போகிறேன்.//

  இப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்தபின் அப்படி வாழ்வதில் பல அசௌகரியங்கள் உண்டு சகோதரி !

  Like

 3. பாருங்க அண்ணா… விக்கி அப்பாடானு சொல்றார்.இவங்களுக்கு நடுவில வாழ்றதை விட அங்க சௌகரியமா இருக்கும்.

  Like

 4. விக்கி, ஆனாலும் உனக்கு கொழுப்புயா !

  Like

 5. என்ன செய்ய, பிற்காலத்தில் குடிமக்கள் அதிகமாகும் போது குடியிருக்க அவங்க குடியை அபகரிக்க தான் செய்வார்கள்.

  ஆமா அவங்க கூட்டத்தில் ஒரு பொண்ணையும் காணோமே ஏன்?

  Like

 6. //சௌகரியமா இருக்கும்.//

  பிறகு என்ன? யாரும் தடுக்கலைப்பா….

  //உனக்கு கொழுப்புயா !//

  ஆமாவாங்க… நல்லா உடல் பயிற்சி செஞ்ஞி குறைச்சிக்கிறேன்..

  Like

 7. /பாருங்க அண்ணா… விக்கி அப்பாடானு சொல்றார்.இவங்களுக்கு நடுவில வாழ்றதை விட அங்க சௌகரியமா இருக்கும்//

  🙂

  Like

 8. //என்ன செய்ய, பிற்காலத்தில் குடிமக்கள் அதிகமாகும் போது குடியிருக்க அவங்க குடியை அபகரிக்க தான் செய்வார்கள்.

  ஆமா அவங்க கூட்டத்தில் ஒரு பொண்ணையும் காணோமே ஏன்?

  //

  ஓ… அப்படியா… எல்லாமே பொண்ணுங்க தான்னு நினைச்சேன் நான் 😉

  Like

 9. //ஆமாவாங்க… நல்லா உடல் பயிற்சி செஞ்ஞி குறைச்சிக்கிறேன்..//

  சீக்கிரம்.. அது ரொம்ப முக்கியம் !

  Like

 10. அண்ணா, நீங்க கட்டுரை எழுத விக்கி நிறைய ஆலோசனை தந்திட்டே இருக்கார்.இப்போ பாருங்க “உடல் கொழுப்பைக் குறக்க”ன்னு ஒரு பதிவு போடுங்க.விக்கிக்குத் தேவைப்படும்.

  பாருங்க நான் காட்டுக்குப் போறதை யாரும் தடுக்கலையாம்.
  போகட்டாம்.அப்போ நீங்க சொன்னது சரிதான்.
  நல்ல……. கொழுப்புத்தான்.

  Like

 11. 1) மழுப்புதல் யாவர்க்கும் சுலபமாம்.

  2) ஆடல் தெரியாதவள் மோடை கோனல் என்றாளாம்.

  3) குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு.

  4) அரசியல்வாதியை நம்பாதே…

  சும்மா எழுதி பார்த்தேன்….

  Like

 12. //“உடல் கொழுப்பைக் குறக்க”ன்னு ஒரு பதிவு போடுங்க.விக்கிக்குத் தேவைப்படும்//

  மலேஷிய வெயிலே அந்த வேலையைச் செய்யும் 😀

  Like

 13. பிரம்மிப்பா இருக்கு… இன்னும் இது போல பழங்குடி இன மக்கள் இருக்கிறாங்கன்னு நினைக்கும் போது…

  அது சரி.. பின்னூட்டத்துல யாரு இந்த பசங்க….. சண்டை போட்டுக்கிட்டு உங்க கிட்ட பஞ்சாயத்துக்கு வர்றாங்க…. நல்ல தீர்ப்ப சொல்லுங்க…

  மஹாலக்ஷ்மி

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s