ஷுகர்: கண்ணைப் பார்த்தே கண்டறியலாம் !!!

வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என்பது போல குடும்பங்கள் தற்போது வீட்டுக்கு ஓரிரு நீரிழிவு நோயாளிகளை வளர்த்து வருகிறது என்பது உலகையே கவலைக்குள்ளாக்கியிருக்கிறது.

வெகு சாதாரணமாக எனக்கு ஷுகர் இருக்கு என்று சொல்லித் திரியும் மக்களுக்கு அந்த நோய் குறித்த முழுமையான புரிதல் இருப்பதில்லை. உடலிலுள்ள எல்லா உறுப்புகளையும் சென்று தாக்கி பலமிழக்கச் செய்து, செயலிழக்க வைத்து ஒட்டு மொத்த உடலையே அழிக்கும் கொடிய நோய் தான் சர்க்கரை நோய் என்றால் பலர் பயப்படக் கூடும். ஆனால் அது தான் உண்மை.

உடலிலுள்ள இன்சுலின் அளவு தான் இந்த குளறுபடிகளுக்கெல்லாம் காரணம் என மேலோட்டமாகச் சொல்லிவிடலாம். அதாவது கணையத்திலிருந்து சுரக்கும் இந்த இன்சுலின் அளவுக்கு அதிகமாகச் சுரந்தாலும், சாதாரண அளவை விடக் குறைவாகச் சுரந்தாலும் பிரச்சனை தான்.

சரி இந்த இன்சுலின் என்ன தான் செய்கிறது ? என்று கேட்பவர்களுக்கு சுருக்கமாகச் சொல்லவேண்டுமெனில், இது தான் நாம் உண்ணும் உணவிலுள்ள குளுகோஸை கிரகித்து   உடலின் உறுப்புகளுக்குத் தேவையான ஆற்றலாக மாற்றுகிறது. இந்த இன்சுலில் குறைவாக இருந்தால் குளுகோஸ் சத்து முழுவதும் உறிஞ்சப்படாமல் போய்விடுகிறது, அதிகமாகச் சுரந்தால் அளவுக்கு அதிகமாக குளுகோஸ் சத்து உறிஞ்சப்பட்டு சட்டென உடலில் குளுகோஸ் அளவு குறைந்துவிடும்.

இதனால்தான் சிலர் சர்க்கரை நோய்க்காக பையில் எப்போதும் மாத்திரைகள் அல்லது ஊசி வைத்திருப்பார்கள். சிலர் சர்க்கரை நோய்க்கு மருந்தாக இனிப்பை வைத்திருப்பார்கள். அதன் காரணம் இது தான்.

இந்த நோயாளிகளுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை மருத்துவப் பரிசோதனைகள் தான். அடிக்கடி கையில் ஊசி குத்தி இரத்தம் எடுத்து எடுத்தே அவர்கள் கைகள் புண்ணாகிப் போய்விடுவதுண்டு. இந்த அவஸ்தையை காலம் முழுவதும் பல்லைக் கடித்துக் கொண்டு இருந்தாக வேண்டுமே எனும் கவலைதான் அவர்களை ஆட்டிப் படைக்கும்.

அப்படிப்பட்டவர்களுக்கு சற்றே ஆறுதலளிக்கும் செய்தியைப் பற்றியதே நான் சொல்ல வந்த விஷயம். அதாவது, தற்போது ஒரு புதிய கருவி ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கருவி என்றவுடன் பெரிய பெரிய இயந்திரங்களைக் கற்பனை செய்தீர்கள் என்றால் அந்த கற்பனையை தூரமாய் ஒதுக்கி விடுங்கள். இது ஒரு அரிசியின் பாதியளவே உள்ள கருவி.

இந்தக் கருவியை கண்ணின் ஓரத்தில் வைத்துவிட வேண்டும். இந்த கருவி புற ஊதாக் கதிர்களை வெளியிடக் கூடிய கருவி. அதாவது உடலில் சருக்கரை அளவு அதிகரித்தால் இந்த கருவியிலிருந்து வெளிவரும் கதிர்கள் அதிகமாக இருக்கும். உடனே மறுபடியும் கற்பனைக் குதிரையைத் தட்டி விடாதீர்கள். இந்த வெளிச்சத்தை சாதாரண கண்களால் பார்க்க முடியாது. அதன் அளவை அறிய ஒரு சிறு தீப்பெட்டி அளவே உள்ள ஒரு சிறு கருவியை (புளூரோ போட்டோ மீட்டர்) கண்ணின் முன்னால் ஒரு இருபது வினாடிகள் காட்ட வேண்டும்.

அவ்வளவு தான் சோதனை முடிந்தது. அந்த சிறு கருவி சொல்லிவிடும் உங்கள் உடலிலுள்ள சருக்கரையின் அளவை. அதாவது கண்ணில் ஒரு சிறு கருவி, அதிலிருந்து வெளிவரும் கதிர்களை ஆராய ஒரு சிறு கருவி அவ்வளவு தான். எத்தனை முறை வேண்டுமானாலும் உடலிலுள்ள சருக்கரை அளவைச் சோதித்துக் கொள்ளலாம். வரிசையில் காத்திருக்க வேண்டியதும் இல்லை ஊசி குத்தும் அவஸ்தையும் இல்லை.

உடலிலுள்ள இண்டர்ஸ்டிஷியல் எனும் திரவத்தைக் கொண்டே இந்த கருவி இயங்குகிறது. இந்த கருவியின் வரவு பல்வேறு நாடுகளிலுமுள்ள மருத்துவர்களை பெரிதும் கவர்ந்திருக்கிறது. ஐசென்ஸ் எனும் ஜெர்மன் நிறுவனத்தின் கண்டுபிடிப்பான இந்த கருவி மருத்துவ உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.

யூ.கேவின் ஜெம்மா எட்வர்ட்ஸ் எனும் மருத்துவர் இதைக் குறித்து விளக்குகையில், யூகேவிலுள்ள சுமார் இருபத்தைந்து இலட்சம் சருக்கரை நோயாளிகளுக்கும் இது ஒரு நல்ல வரப்பிரசாதம் என்றார்.

சரி இந்தக் கருவியைக் கண்ணில் பொருத்துவது எப்படி என வினவினால், கண்ணின் ஓரமான ஒரு துளி மருந்தை விடுவோம். கண்ணின் அந்தப் பகுதி மரத்துப் போய்விடும் மெல்லிய ஒரு ஊசியால் இந்தக் கருவியை அங்கே வைத்து விட வேண்டிது தான். அதிகபட்சம் மூன்று நிமிட வேலை என புன்னகைக்கின்றனர். ஒரு வருடத்துக்கு ஒருமுறை இந்தக் கருவியை மாற்றி புதிதாய் வைத்து விடவேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

கவர்ந்திழுக்கும் இந்த கண்டுபிடிப்பு இன்னும் பல சோதனை ஆய்வுகளைக் கடந்து விரைவில் சந்தைக்கு வரவேண்டும் என்பதே நோயாளிகளின் விருப்பமாக இருக்கக் கூடும்.

 ஃ

29 comments on “ஷுகர்: கண்ணைப் பார்த்தே கண்டறியலாம் !!!

 1. Vanakam Xevier

  it’s a good product when it will come in chennai??

  if quick means Tamilnadu CM announced it’s free for all suger affted people for next Election :-)))

  Puduvai siva

  Like

 2. //மெல்லிய ஒரு ஊசியால் இந்தக் கருவியை அங்கே வைத்து விட வேண்டிது தான்//

  இது ஒரு சதி வேலை…

  Like

 3. //அந்த சிறு கருவி சொல்லிவிடும் உங்கள் உடலிலுள்ள சருக்கரையின் அளவை.//

  என் காதலியிடம் காதலின் அளவை காண்பிக்க இப்படி ஏதாவதி கண்றாவிய கண்டு பிடிச்சி வச்சிருக்காங்களா….

  Like

 4. //மொச புடிக்கிற நாய மூஞ்சிய பாத்தாலே தெரியுமாமே!!//

  கொசு அடிக்கிற போய எட்டி உதைச்ச ஓடுமாமே…. :))))

  Like

 5. /thagaval nallathan irukku.marunthu vasam ovara adikkuthu. jollya eluthunga bossu.//

  மருந்து வாசம் கம்மி பண்ற மாதிரி அடுத்த சமாச்சாரம் போட்டுடறேன் 🙂

  Like

 6. //if quick means Tamilnadu CM announced it’s free for all suger affted people for next Election :-)))//

  நான் தான் அடுத்த முதல்வர்ன்னு ஏழெட்டு பேர் சொல்லிட்டு திரியறாங்க… நீங்க யாரைச் சொல்றீங்க 😉

  Like

 7. ///மெல்லிய ஒரு ஊசியால் இந்தக் கருவியை அங்கே வைத்து விட வேண்டிது தான்//

  இது ஒரு சதி வேலை…

  //

  “சதி” எல்லாம் எப்பவோ வரலாற்றுல இருந்து எடுத்துப் போட்டாச்சு தம்பி 🙂

  Like

 8. //என் காதலியிடம் காதலின் அளவை காண்பிக்க இப்படி ஏதாவதி கண்றாவிய கண்டு பிடிச்சி வச்சிருக்காங்களா….

  //

  யார் மீதான காதலைன்னு நீ சொல்லலையேப்பா??? 🙂

  Like

 9. ////மொச புடிக்கிற நாய மூஞ்சிய பாத்தாலே தெரியுமாமே!!//

  கொசு அடிக்கிற போய எட்டி உதைச்ச ஓடுமாமே…. :))))
  //

  ரெண்டு பேரும் என்ன பேசிக்கிறீங்கன்னு புரியாம மச மசன்னு நிக்கிறேன் நானு 🙂

  Like

 10. சேவியர் அண்ணா,நல்ல உபயோகமான பதிவு.எல்லாத் தலை முறையினருக்கும் பயன் படும்.

  //என் காதலியிடம் காதலின் அளவை காண்பிக்க இப்படி ஏதாவ கண்றாவிய கண்டு பிடிச்சி வச்சிருக்காங்களா….//

  பாருங்க லொள்ளு.

  விக்கி,சிவா(நானும்) எதுக்கும் இந்த பதிவை பத்திரமா வையுங்க.
  சேவியர் அண்ணா சொன்ன விஷயத்தை விட்டிட்டு என்னென்னமோ புதுமொழியெலாம் சொல்றிங்களே! ஷுகர் வந்தா உதவியா இருக்கும்ல்ல.பாவம் சேவியர் அண்ணா.

  Like

 11. //கண்ணின் ஓரமான ஒரு துளி மருந்தை விடுவோம். கண்ணின் அந்தப் பகுதி மரத்துப் போய்விடும் மெல்லிய ஒரு ஊசியால் இந்தக் கருவியை அங்கே வைத்து விட வேண்டிது தான்.//

  இது ஆறுதலளிக்கும் செய்தியா தெரியவில்லை.

  ஆங்.. அப்புறம் ஏதாவது ஆச்சுன்னா என்னாப் பண்ணுறது.
  நிஜமாவே கண்ண குத்திபோட்டீங்களே சாமீன்னு அழவேண்டியது தான்.

  Like

 12. /சேவியர் அண்ணா,நல்ல உபயோகமான பதிவு.எல்லாத் தலை முறையினருக்கும் பயன் படும்.

  //

  நன்றி தங்கையே

  Like

 13. //இது ஆறுதலளிக்கும் செய்தியா தெரியவில்லை.

  ஆங்.. அப்புறம் ஏதாவது ஆச்சுன்னா என்னாப் பண்ணுறது.
  நிஜமாவே கண்ண குத்திபோட்டீங்களே சாமீன்னு அழவேண்டியது தான்.
  //

  சாமி கண்ண குத்தலாம்…
  இல்லேன்னா
  கண்ண குத்திட்டாங்கன்னும் சாமி கிட்டே போலாம் !!!

  மேட்டர் நல்லா இருக்கே 🙂

  Like

 14. எங்க‌ள் குடும்ப‌த்தில் இருவ‌ருக்கு இந்நோய் இருப்ப‌தால், தாங்க‌ள் குறிப்பிட்டுள்ள‌ விஷ‌ய‌ங்க‌ள் ச‌ட்டென‌ப் புரிந்த‌து என‌க்கு; த‌க‌வ‌ல் த‌ந்த‌மைக்கு மிக்க‌ ந‌ன்றி! ச‌ர்க்க‌ரை வியாதியுள்ள‌வ‌ர்க‌ளைவ‌ருக்கும், த‌ங்களுடைய‌ இத்த‌க‌வ‌ல் மிக‌வும் ப‌ய‌னுள்ள‌தாயிருக்கும் என்ப‌தில் எவ்வித‌ ச‌ந்தேக‌முமில்லை. இவ்வ‌ச‌தி ந‌ம் நாட்டுக்கு மிக‌ விரைவில் வ‌ந்து சேர்ந்தால், நிறைய‌பேர் ப‌ய‌ன‌டைவார்க‌ள் என்ப‌தில் ச‌ந்தேக‌மில்லை! ஹை ஸுக‌ராவ‌து ப‌ர‌வாயில்லை, ச‌மாளித்துவிட‌லாம்; லோ ஸுக‌ர் வ‌ந்துவிட்டால், நோயாளிக‌ள் ப‌டும்பாடு மிக‌வும் கொடிய‌து.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s