உங்களிடம் மருத்துவக் காப்பீடு இருக்கிறதா !! : உஷார் !!!

ஒரு பத்து பதினைந்து நண்பர்கள் ஒன்று சேர்ந்து எங்கேயாவது ஒரு இடத்தில் மாதம் ஓரிரண்டு முறையாவது கூடி பழைய கதைகளைப் பேசி வெட்டியாய் அரட்டையடித்துச் சிரிப்பது கடந்த பல ஆண்டு காலப் பழக்கம்.

உலக அரசியல் பற்றியும், நோபல் பரிசு பற்றியும், சர்வதேச இலக்கியங்களைப் பற்றியும் எங்கள் உரையாடல் இருக்கும் என்றால் அது கடைந்தெடுத்த பொய். வெறுமனே யாரையாவது கிண்டலடித்துக் கொண்டோ, அல்லது அலுவலகத்தில் ஏதேனும் ஒரு உயரதிகாரியை வம்பிழுத்துக் கொண்டோ, எதுவும் இல்லையேல் கல்லூரி காலம் தொட்டே தொடரும் அடுத்தவனின் காதல் கதைகளை அசைபோட்டுக் கொண்டோ முழுக்க முழுக்க வெட்டியாய் முடியும் எங்கள் சந்திப்பு. ( குடித்த தண்ணிக்கும், அடித்த தம்முக்கும், கடித்த சிக்கனுக்கும் யாரு பணம் கொடுப்பது எனும் சண்டை மட்டும் வந்ததேயில்லை என்பது ஆச்சரியம் )

கடந்த முறை இப்படி ஒன்று கூடியபோது என் நண்பன் ஒருவனின் கையில் பெருவிரலோடு சேர்த்து ஒரு சின்ன கட்டு. ‘என்னடா மச்சி என்னாச்சு ? பொதுவா பெருவிரலுக்கு கேடு வராதே… நீ என்ன பண்ணினே’ என ஆரம்பித்தார்கள். அவன் சொன்ன செய்தி உலுக்கிப் போட்டது அனைவரையுமே.

ஐந்து வருடங்களுக்கு மேல் ஒரு கம்பெனியில் இருப்பது சாவான பாவம் என்பதால், இவன் இப்போது தான் கம்பெனி தாவி, இன்னொரு கம்பெனியில் குடியேறியிருந்தான். அலுவலகம் செல்லும் வழியில் பைக் வழுக்கி விழ கையில் அடி. கை வலிக்கிறதே என அருகில் இருந்த ஒரு மிகப் பிரபலமான மருத்துவ மனையின் கிளை ஒன்றுக்குச் சென்றிருக்கிறான். 

வரவேற்பறையில் இருந்த பெண் முதலில் பார்த்தது இவனுடைய கழுத்தில் கிடந்த ‘அடையாள அட்டையை’. பார்த்த மாத்திரத்திலேயே அவளுக்குப் புரிந்து விட்டது.. வடிவேலு பாணியில், “ஒருத்தன் மாட்டியிருக்காண்டா” என்று உள்ளுக்குள் நினைத்திருப்பாள் போல.

கனிவான குரலில் அவனை அருகில் அமரச் செய்து ( ஆட்டுக்கு மஞ்சள் பூசுவது போல ) கவனித்திருக்கிறார்கள். சற்று நேரம் அமர்ந்திருந்த அவனைப் பரிசோதித்திருக்கிறார் ஒரு டாக்டர். அவர் பார்த்து விட்டு, பெருவிரலில் எலும்பு உடைந்திருக்கிறது. ஒரு சின்ன அறுவை சிகிச்சை செய்து ஒரு சிறு மெட்டல் ஸ்குரூ மாட்டவேண்டும். அதற்கு முன் எக்ஸ்ரே, ஜெராக்ஸ், கலர் ஜெராக்ஸ், பேக்ஸ் எல்லாம் எடுக்க வேண்டுமென பட்டியலிட்டிருக்கிறார்.

இவன் சற்று உஷாராகி, ‘ஐயோ அதெல்லாம் வேண்டாம்… அதுக்கெல்லாம் நிறைய செலவாகுமே’ என்றிருக்கிறான்.

அவரோ, பிரச்சனையில்லை. உங்கள் கம்பெனி மெடிகல் இன்சூரன்ஸில் எல்லாம் கவர் ஆகிவிடும் என திருவாய் மலர்ந்திருக்கிறார்.

ஆஹா… இவர்களுடைய திட்டம் இது தானா ? என உள்ளுக்குள் நினைத்த நண்பன்.
‘டாக்டர். நான் நேற்று தான் இந்த கம்பெனில சேர்ந்தேன். எனக்கு இன்னும் இன்சூரன்ஸ் கிடைக்கவில்லை. இப்போதைக்கு ஏதேனும் முதலுதவி செய்யுங்கள். இன்சூரன்ஸ் வந்ததும் உங்களை வந்து சந்திக்கிறேன்’ என்று சொல்லியிருக்கிறான்.

ஏதோ கேட்கக் கூடாததைக் கேட்டது போல காதைப் பொத்திய அவர், ஒரு அற்பப் பதரைப் பார்ப்பது போல இவனை ஏற இறங்கப் பார்த்திருக்கிறார். பின் நர்சைக் கூப்பிட்டு இவனுக்கு பர்ஸ்ட் எய்ட் குடும்மா என சலிப்புடன் சொல்லியிருக்கிறார்.

நர்சும் அவனைக் கூப்பிட்டு அருகிலுள்ள அறைக்குச் சென்று, விரலைப் பிடித்து ஒரு கட்டு போட்டு விட இரண்டு நாட்களில் எல்லாம் சரியாகிவிட்டது !

இவன் சிரித்துக் கொண்டே கதையைச் சொல்ல, சிரித்துக் கொண்டிருந்த தூக்கி வாரிப் போட்டது.

ஒருவேளை அவன் இன்சூரன்ஸ் இருக்கிறது என்று சொல்லியிருந்தால் நல்லா இருக்கும் ஒரு எலும்பை உடைத்து ஒட்டுப் போட்டிருப்பார்களோ ? தேவையற்ற அறுவை சிகிச்சை நடந்திருக்குமோ ? பல பத்தாயிரங்கள் கறக்கப்பட்டிருக்குமோ ? என்றெல்லாம் கலவரமாய் பேசிக்கொண்டிருந்தோம்.

அதைத் தொடர்ந்து, நிறைய பேர் நிறைய கதைகளைப் பரிமாறினார்கள். இன்சூரன்ஸ் கம்பெனிக்குப் பேசி எவ்வளவு கவரேஜ் இருக்குமோ அதுக்குத் தக்கபடி சிகிச்சைகளும், பில்லும் மருத்துவமனைகளில் தரப்படும் என்பதே பலருடைய அனுபவக் கதையாக இருந்தது.

எங்கள் குழுவில் இருந்த project director சொன்னார். மெடிக்கல் இன்சூரன்ஸ் இருந்தாலும், மருத்துவ மனைக்குச் செல்லும்போது இல்லை என்று சொல்வதே நல்லது. எவ்வளவு செலவாகிறதோ அதை நீங்கள் பிறகு மெடிக்கல் இன்சூரன்ஸில் சமர்ப்பித்துப் பெற்றுக் கொள்ளலாம். மெடிக்கல் இன்சூரன்ஸ் இல்லை என்றால் தேவையற்ற பல விஷயங்கள் நடக்காது. இல்லையேல் நீங்கள் பொன் முட்டையிடும் வாத்து என கண்டுகொண்டு உங்களிடமிருந்து இல்லாத முட்டையை எல்லாம் எடுப்பார்கள். !

எங்கள் எல்லோர் மனதிலும் ஓடிய கேள்வி இது தான்.

மெடிக்கல் இன்சூரன்ஸ் நல்லதா ? கெட்டதா ?

பின் குறிப்பு : இது சற்றும் கலப்படமில்லாத உண்மை நிகழ்வு. நண்பன் சத்யம் நிறுவனத்தில் வேலை பார்க்கிறான். 

படம் :

மருத்துவக் காப்பீடு எனும் புலியைப் பிடித்துக் கொண்டிருக்கிறோம். அது நம்மைப் பாதுகாக்குமா, பாழாக்குமா என கிலியுடன் திரிவதைச் சித்தரிக்கிறது இந்தப் படம் என யாரேனும் விளக்கம் சொல்லக் கூடும். எனவே நான் அமைதி காக்கிறேன் J

29 comments on “உங்களிடம் மருத்துவக் காப்பீடு இருக்கிறதா !! : உஷார் !!!

  1. சமீபத்தில் எனது அலுவலக புல்லடின் போர்டில் கூட தேவையில்லாமல் ஆபரேஷன் அது இது என்று வளர்த்து விட்டு பணம் பறிக்கும் ஒரு மருத்துவமனை பற்றி பல பேர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டார்கள்

    Like

  2. neengal solvathu 100% sari
    enathu uravinar hospital admit aana pothu antha docotor(cardialogy specialist chennai) fir question evvalavukku insurance irukku nnu?

    Like

  3. //மெடிக்கல் இன்சூரன்ஸ் இருந்தாலும், மருத்துவ மனைக்குச் செல்லும்போது இல்லை என்று சொல்வதே நல்லது.//

    இருக்கு ஆனா இல்ல…

    ஆஹா … S.J.சூர்யா மாதிரிதான் பேசணும் போல..

    Like

  4. தங்களுடைய கருத்து முற்றிலும் சரி.எச்சரிக்கையாக இருக்கனும் அப்படி இல்லாட்டி சின்ன வலிக்கு பெரிய விலையை கொடுக்கணும்

    Like

  5. /
    எங்கள் எல்லோர் மனதிலும் ஓடிய கேள்வி இது தான்.

    மெடிக்கல் இன்சூரன்ஸ் நல்லதா ? கெட்டதா ?
    /

    இந்த சிறு சம்பவத்துக்காக மெடிகல் இன்சூரன்ஸ் கெட்டது என முடிவு செய்ய கூடாது இதே ஒரு பெரிய விபத்தாக இருந்திருந்தால் ????

    //மெடிக்கல் இன்சூரன்ஸ் இருந்தாலும், மருத்துவ மனைக்குச் செல்லும்போது இல்லை என்று சொல்வதே நல்லது.//

    இதுவும் சரியாக தோன்றவில்லை நல்ல மருத்துவர்களையும் மருத்துவமனைகளையும் கண்டுபிடித்து வைத்துக்கொள்வது நல்லது!

    Like

  6. //சமீபத்தில் எனது அலுவலக புல்லடின் போர்டில் கூட தேவையில்லாமல் ஆபரேஷன் அது இது என்று வளர்த்து விட்டு பணம் பறிக்கும் ஒரு மருத்துவமனை பற்றி பல பேர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டார்கள்/

    இது குறித்த விழிப்புணர்வு பரவலாக்கப்படுதல் நல்லது.

    Like

  7. /////I have health insuranse for safty//

    ///

    உங்க காப்பீடு உங்கள் பாதுகாப்புக்கா, மருத்துவர்களின் பாதுகாப்புக்கா என்பது தான் கேள்வியே 😀

    Like

  8. //neengal solvathu 100% sari
    enathu uravinar hospital admit aana pothu antha docotor(cardialogy specialist chennai) fir question evvalavukku insurance irukku nnu?

    //

    எங்கே போய் சொல்ல சார்.. இந்த கொடுமையை !

    Like

  9. //தங்களுடைய கருத்து முற்றிலும் சரி.எச்சரிக்கையாக இருக்கனும் அப்படி இல்லாட்டி சின்ன வலிக்கு பெரிய விலையை கொடுக்கணும்

    //

    ஆமா… அதுவும் எல்லாமே பணமாகிவிட்ட சூழலில்….

    Like

  10. //இந்த சிறு சம்பவத்துக்காக மெடிகல் இன்சூரன்ஸ் கெட்டது என முடிவு செய்ய கூடாது இதே ஒரு பெரிய விபத்தாக இருந்திருந்தால் ????

    //

    உண்மை சிவா… 🙂

    Like

  11. இப்போவெல்லாம் கிழவர்கள் கூட பல லஷங்கள் செலவழிந்த பின்தான் செத்துப் போகிறார்கள். இந்த இன்சுரன்ஸ்தான் அதுக்கும் காரணம். சாஃப்ட்வேர் பிள்ளையோட அப்பான்னா அவ்வளவு சீக்கிரமாக சாகக்கூட விட மாட்டேங்கிறாங்க.அவரொட lungs வேலை செய்யலேன்னாகூட‌ வெண்டிலேடர்ல மூணூதடவை போவார்.

    எக்ஸ்ரேயே எடுக்காம நேராக MRI ஸ்கேன் பண்ணுவாங்க.
    எல்லாம் இன்ஸுரன்ஸ் பண்ணுர வேலை.
    அனுபவப்பட்ட‌
    கமலா

    Like

  12. மெடிக்கல் இன்சூரன்ஸ் இருந்தால் ரெண்டு மாத்திரையில் குணமாகிற வியாதிக்கு கூட இரண்டு வாரம் மருத்துவமனையில் இருத்தி பிளட் டெஸ்ட் மந்த்லி டெஸ்ட் எல்லாம் செய்து (முடிந்தால் அறுவை சிகிச்சை) பில் போட்டு கம்பெனிக்கு அனுப்பி விடுகின்றனர் என்று பரவலாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

    Like

  13. //ENAKUM ITHU NADANTHATHU…..KIDNEY,KUDAL,ITHAYAM ENA MUTTON STALL RANGEKU RED SIGNAL KAATAPAATU “AHA…. INGA IRUNTHA PADUKA POTTU PATTI PAATHUDUVAANGADANU” ODI VANTHUTEN

    //

    நல்ல வேளை தப்பிச்சீங்க ! 🙂

    Like

  14. sir,
    You are true nowadays this mediclaim has become a ATM for some of the money making hospitals even your friend could have said that I dont have any job thne the hospital people’s approach would have been entirely different. Medical Professional is a noble profession in earlier days now its noble prize profession may get lakhs and crores together.

    Like

  15. Though I have some knowledge over medical insurance, I have never thought this could happen. Thank you for warning…

    There is another risk that the Insurer may deny insurance latter on certain expenses, on the ground that such tests are totally unnecessary, having regard to the nature of the injury.

    Thank you for warning!

    Like

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s