தாய்ப்பாலும், குழந்தையின் பதட்டமும் !

தாய்ப்பால் குழந்தைக்கான ஒரு அற்புதமான உணவு என்பதும், அதற்கு இணையான மாற்று உணவு உலகிலேயே இல்லை என்பதும் அனைவரும் அறிந்ததே.

குழந்தைக்கு ஒவ்வாமை நோய் வராமல் காக்கிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, அதிக அறிவுடன் வளர உதவுகிறது, வைரஸ் பாக்டீரியா தாக்குதலிலிருந்து காக்கிறது என்றெல்லாம் தாய்ப்பாலில் மகத்துவம் குறித்து பல்வேறு ஆய்வு முடிவுகள் பல்வேறு வடிவங்களில் இதுவரை வெளிவந்திருக்கின்றன.

கூடவே தாயின் உடல் எடையிழப்புக்கு உதவுகிறது எனவும், தாய்க்கு புற்று நோய் வரும் வாய்ப்பைக் குறைக்கிறது எனவும், எலும்பு முறிவு நோய் வரும் வாய்ப்பைக் குறைக்கிறது எனவும் பாலூட்டுதலின் பயன்களையும் அறிவியல் நிரூபித்துள்ளது.

இப்போது பிரிட்டனில் நிகழ்த்தப்பட்ட புதிய ஆய்வு ஒன்று தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் பள்ளி செல்லும்போது பதட்டமில்லாமல் செயல்படுவார்கள் எனவும், மன அழுத்தத்தைத் தாங்கும் வலிமை படைத்தவர்களாக இருப்பார்கள் எனவும் புதிய ஆய்வு முடிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

சுமார் 9000 குழந்தைகளை வைத்து நடத்தப்பட்ட இந்த ஆய்வு தாய்ப்பாலின் தேவையை இன்னொரு பரிமாணத்தில் முக்கியத்துவப் படுத்துகிறது.

சமூகத்தின் சூழலை ஏற்று உள்வாங்கி செயல்படுதலுக்கும், பரிச்சயமற்ற சூழலில் கூட பதட்டமில்லாமல் செயல்படுவதற்கும் வேண்டிய மன தெளிவை குழந்தைகளுக்கு தாய்ப்பாலின் சக்தி வழங்குகிறது என இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

இது பாலூட்டும் போது நிகழும் தாய்க்கும் குழந்தைக்கும் இடையேயான தொடுதல் உறவினாலோ, அல்லது பாலில் இருக்கும் உன்னத சக்தியினாலோ நிகழ்ந்திருக்கலாம். எப்படியெனினும் தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் பள்ளிக்காலங்களில் ஏற்படக் கூடிய பதட்டம், மன அழுத்தம் அனைத்தையும் எளிதில் கடந்து விடுகின்றனர் என்பது மட்டும் திண்ணம்.

தாய்ப்பால் ஊட்டவேண்டுமா, வேண்டாமா என யோசிக்கும் தாய்மார்களுக்கு இந்த ஆய்வு முடிவு ஒரு வழிகாட்டியாய் இருக்கும். இருக்கவேண்டும்.

10 comments on “தாய்ப்பாலும், குழந்தையின் பதட்டமும் !

  1. பாலுட்டிகளின் குட்டிகள் பிறந்த இரண்டு மணி நேரத்திற்குள் தனது தாயின் மடியை முட்டி மோதிச் சென்று பால் குடித்துவிடுமாம். தாய் தானகச் சென்று குட்டிகளுக்கு பாலுட்டாது. மனிதர்களில் தாய் தனது மார்பக வலியை தவிர்கவும் பிள்ளைக்கு உயிர் சத்து நிறைந்த உணவைக் கொடுக்கவும் பாலூட்டுகிறாள். சில தாய்மார்களிடையே பாலூட்டுதல் இளமையையும் அழகையும் குறைத்துவிடும் எனும் எண்ணங்கள் இருப்பது வேதனைக்குறியது. எந்த யானையும் தன் குட்டிக்கு புட்டி பால் கொடுப்பதில்லை.

    Like

  2. /
    தாய்ப்பால் ஊட்டவேண்டுமா, வேண்டாமா என யோசிக்கும் தாய்மார்களுக்கு இந்த ஆய்வு முடிவு ஒரு வழிகாட்டியாய் இருக்கும். இருக்கவேண்டும்.
    /

    அப்பிடி போடுங்க அருவாள!
    🙂

    Like

  3. அஹா…அதான் என் வீட்டுக்காரருக்கு என்னை கண்டு கொஞ்சம் கூட பயமோ, பதட்டமோ இல்லையா?

    நல்ல கட்டுரை. ஆனா எனக்கு தெரிஞ்சி யாரும் வேண்டுமென்றே செய்வதுகிடையாது, முக்கியமாக வேலைக்கு போகின்றவர்கள் தான் வழியில்லாமல் புட்டிப்பால் கொடுக்கின்றார்கள்.

    Like

  4. //ஆனா எனக்கு தெரிஞ்சி யாரும் வேண்டுமென்றே செய்வதுகிடையாது,//

    உங்களுக்குத் தெரியாதவங்க தான் இந்த தப்பைப் பண்றாங்க போல 😀

    Like

  5. அட நிஜமாத்தேன் சொல்றேன்.
    என்ன…., இந்த ஊரில, நமக்கு மிஞ்சி மிஞ்சி போனா ஒரு அஞ்சாறு பேரத்தெரியும்.

    Like

  6. //நன்றி விக்கி. நல்ல பின்னூட்டம்.//

    விக்கி இந்த முறைதான் நல்ல பின்னூட்டம் தந்திருக்கிறார்.
    ஒரு சபாஷ் சொல்லியிருக்கலாமே!

    Like

  7. நகைச்சுவையாய் தந்தாலும் ரசிக்கும்படி சொல்பவன் தம்பிப்பய.. அதனால அவனுக்கு எப்பவுமே என்னோட சபாஷ் உண்டு !

    Like

Leave a comment