போய் டீ குடிச்சிட்டு வாங்க…

tea2.jpgதேனீர் ( டீ ) குடிப்பது உடல்நலத்துக்குக் கேடானது என்று காலம் காலமாய் உலவி வந்த நம்பிக்கையை சமீபத்திய ஆராய்ச்சிகள் பொய்யாக்கியிருக்கின்றன. தேனீர் குடிப்பது உடல் நலத்துக்கு தீங்கானது அல்ல என்று கடந்த ஆண்டு ஆராய்ச்சியாளர்கள் அறிவித்திருந்தார்கள். தற்போது ஒரு படி மேலே போய் தேனீர் எந்தெந்த விதத்தில் உடலுக்கு நன்மை பயக்கும் என்பதையும் பட்டியலிட்டிருக்கிறார்கள்.

தண்ணீர் குடிப்பதை விட தேனீர் குடிப்பது நல்லது என்று தடாலடியாய் ஆரம்பிக்கிறார் லண்டன் கல்லூரி ஆரோக்கியத் துறை மருத்துவர் ரக்ஸ்டன். தண்ணீர் குடிப்பது உடலில் உள்ள தண்ணீர் தேவையை நிவர்த்தி செய்கிறது. ஆனால் தேனீர் அருந்துவது உடலின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதுடன் பல நன்மைகளையும் செய்கிறது என்கிறார் அவர்.

இதனால் தேனீர் உடலின் திரவ அளவை குறைக்கும் என்னும் கருதல்களும் உடைந்திருக்கிறது. முதலில் தேனீர் குடிப்பதனால் மாரடைப்பு நிகழும் வாய்ப்பு பெருமளவு குறைகிறதாம். தினமும் மூன்று குவளை தேனீர் அருந்துபவர்கள் மாரடைப்பிலிருந்து பெரும்பாலும் தப்பி விடுவதாக அவர் தெரிவிக்கிறார்

பற்களுக்கும், எலும்புகளுக்கும் கூட தேனீர் சிறந்த மருந்தாகிறது. ஆரோக்கியமான பற்களுக்கும், உறுதியான எலும்புகளுக்கும் தேனீர் துணை செய்கிறது.

தேனீர் உடலிலுள்ள செல்களின் வளர்ச்சிக்கும் துணை செய்கிறது. செல்களின் வளர்ச்சிக்கு தேனீர் துணை செய்வதால் அது புற்று நோய் வரும் பாதிப்பைக் கூட குறைக்கும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள்.

எனினும் தேனீரில் முழுமையான பலனைப் பெறவேண்டுமானால் தேனீரில் பால் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும் எனக் கூறி இது வரை உற்சாகமாய் வாசித்து வந்த உங்கள் உற்சாகத்துக்கு ஒரு வேகத் தடையையும் அவர்கள் போடுகிறார்கள்

4 comments on “போய் டீ குடிச்சிட்டு வாங்க…

  1. tea without milk is the original drink, try with lil lemon and honey and ice it a refreshing drink to lose weight and a nice appetizer too. also alavukku meerinaal amirdhamum nanju, black tea oru velai is good for health else pitham dhaan tharum (anubhavamae).

    Like

  2. Pingback: சமையலை சொதப்புவது எப்படி? « தாளிக்கும் ஓசை

  3. ம்ம்ம்ம் – தெரிந்த தகவலென்றாலும், பால் இல்லாத தேத்தண்ணீர் நமக்கு பழக்கமில்லாத ஒன்று. பயனுள்ள தகவல்

    Like

Leave a comment