தமிழை இழிவுபடுத்தும் மலையாளத் திரைப்படங்கள்.

ravanaprabhu1.jpg

மலையாளத் திரைப்படங்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. யதார்த்தத்தின் பின்னணியில் அல்லது முன்னணியில் தான் அவர்களுடைய திரைப்படங்கள் விரியும்.

மிகைப்படுத்தப் படாத நடிப்பையும், இயல்புடன் கூடிய காதாபாத்திரங்களின் ஒப்பனையும் எப்போதுமே என்னைக் கவர்ந்திருக்கின்றன. ( சமீப காலமாக வருகின்ற திரைப்படங்கள் இந்த கலாச்சார பழக்கத்தை உடைத்திருக்கின்றன என்பது வேறு விஷயம். நான் அதைப் பற்றிச் சொல்ல வரவில்லை.)

மலையாளத் திரைப்படங்களில் கொச்சைப்படுத்தப்படும் தமிழும், தமிழ்க் கலாச்சாரமும் பற்றிய தார்மீகக் கோபம் எனக்கு எப்போதுமே உண்டு.

வில்லனின் பெயரை ஆண்டணி என்றோ ஜோசப் என்றோ போட்டு இன்பம் காணும் சில இயக்குனர்களைப் போல, மலையாளிகள் வில்லன் என்று வந்து விட்டால் தமிழர்களை அதுவும் அவர்களை இழிவு படுத்தும் பல வசனங்களோடு தான் அரங்கேற்றுகிறார்கள்.

பாண்டி, அறிவில்லாதவன், விவரம் இல்லாதவன் என்னும் முத்திரையோடுதான் தமிழர்கள் அங்கே முன்னிலைப்படுத்தப் படுகின்றார்கள் என்பது வேதனைக்குரிய விஷயம். வில்லன் அல்லது காமெடியன் அல்லாத ஒரு தமிழ் கதாபாத்திரம் அங்கே வெகு அபூர்வம் !

சட்டென்று நினைவுகளிலிருந்து எடுத்தால் பாண்டிப்பட, ராவணப்ரபு போன்ற சூப்பர் டூப்பர் மலையாள ஹிட் படங்கள் எல்லாம் தமிழர்களின் மீது சாணி அடித்து சம்பாதித்துக் கொட்டியவையே.

தமிழகத்தின் சந்து பொந்துகளில் சாயா கடைகள் போட்டிருக்கும் மலையாண சகோதரர்களை அண்ணே என்று அன்போடு அழைத்தே கெளரவிக்கும் தமிழர் கலாச்சாரத்தை மலையாள இயக்குனர்களோ, தயாரிப்பாளர்களோ வெறுப்புடனே அணுகுவதன் காரணம் என்னவென்பது புரியாத புதிரே.

ஒருவேளை தமிழ்ப்படங்கள் கேரளாவில் பெறும் மாபெரும் வெற்றிகளைச் சகித்துக் கொள்ள முடியாத வயிற்றெரிச்சலின் வெளிப்பாடாய் இருக்கலாம்.

அல்லது தாங்கள் நூறு விழுக்காடு கல்வியறிவு பெற்றவர்கள் தமிழர்கள் இன்னும் கல்வியறிவில் பின் தங்கியவர்கள் தானே என்னும் எள்ளலாக இருக்கலாம்.

அல்லது தமிழர்களிடமிருந்து மின்சாரத்தைப் பெற்றுக் கொண்டும், தமிழகம் முழுவதும் தொழில்களை நடத்திக் கொண்டும் தண்ணீர் கூட தராமல் சுயநலமாய் இருக்கும் அவர்களுடைய இரத்தத்துடன் கலந்த குணமாக இருக்கலாம்.

அல்லது தமிழகத்தைப் போல வளர்ச்சியடைய முடியாத நிலையில் இருக்கின்ற கையாலாகாத தனத்தின் கொப்பளிப்பாக இருக்கலாம்.

எது எப்படியோ முக்கால் வாசி மலையாளத் திரைப்படங்களில் தமிழ் கதாபாத்திரம் ஒன்று வந்து அவமானப் படுகிறது. அதை கேரளா முழுவதும் கை கொட்டிச் சிரிக்கிறது.

நூறு விழுக்காடு கல்வியறிவு பெற்று என்ன பயன் ? சக மனிதனை மதிக்கத் தெரியாத மலையாள படித்த இயக்குனர்களை விட, யாரையும் கபடமின்றி அன்பு செய்யும் எனது தமிழக கிராமத்துத் தோழன் எத்தனையோ மடங்கு உயர்ந்தவன்.

மலையாள இயக்குனர்களே. மனதளவில் அவன் அளவுக்கு நீங்கள் உயரும் வரை தமிழனை பாண்டி என்றோ, கையாலாகாதவன் என்றோ அறிவில்லாதவன் என்றோ திட்டிக் கொண்டே இருங்கள். தமிழன் மன்னிப்பான்.

Advertisements

24 comments on “தமிழை இழிவுபடுத்தும் மலையாளத் திரைப்படங்கள்.

 1. மலயாளத்தில் மட்டுமல்ல.. ஹிந்தியிலும் இது நடக்கிறது. எனக்கு தெரிந்து 2-3 படங்களில் பார்த்து விட்டேன். (படங்கள் பெயர் ஞாபகம் இல்லை).

  அதுவும் அந்த கேரக்டருக்கு தமிழில் நடிக்கும் வில்லனையே போட்டு ஒரு தமிழன் கெட்டவனாக காட்டி அல்லது எட்டப்பனாக காட்டுவார்கள். 😦

  Like

 2. இவ்வளவெல்லாம் கோபப்படணுமாங்க. நம்ம தமிழ் படத்துல கூட ஆந்திரா இல்லன்னா ஹிந்திக்காரன் தாங்க வில்லனா இருப்பான். மலையாள பொண்ணு தெலுங்கு பொண்ணு தான் மோசம்ன்னு காட்டுவாங்க தமிழ் படத்துல..அங்க அங்க இருக்கறவங்கள காட்டுனா அடிப்பாங்கன்னு எல்லாரும் செய்யறது தானேங்க.

  Like

 3. தம்பி, நாம் மட்டும் என்னவாம்? சேச்சிகளை அலைபவர்களாகத்தானே காட்டுகிறார்கள். இது ஒரு வித மன வக்கிரம்; அனைத்து மொழியினரையும் ஆட்டி வைக்கிறது என்பது வருத்தத்துடன் ஒப்புக் கொள்ள வேண்டிய விஷயம்.

  சமீபத்தில் வந்த போரட் என்னும் படம் கஜகிஸ்தானை எந்த அளவு கேவலப்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு கேவலப்படுத்தி எடுத்து இருந்தார்கள். கஜகிஸ்தான் அரசு நியூயார்க் ஸ்டாக் எக்சேஞ்ச் முன்பாக ஆவணப் படம் ஒளி பரப்பி நாங்கள் அந்த மாதிரி இல்லை, தைரியமாக முதலீடு செய்யுங்கள் என சொல்லும் நிலை ஏற்பட்டது.

  அதே நேரத்தில் வெளி வந்த ஜேம்ஸ் பாண்ட் படம் கேஸினொ ராயலை விட இதற்குத்தான் வசூல் அதிகம். நெஞ்சைப் பிடித்துக் கொண்டே இதையும் கேளுங்கள். போரட் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

  Like

 4. நீங்க சொல்றதும் சரிதான் 🙂 நமக்குத் தெரிஞ்ச மலையாள பாத்திரம் ஓமனா குட்டி. நமக்குத் தெரிந்த மலையாள திரைப்படம் அஞ்சரைக்குள்ள வண்டி. ம்..ம்..ம்ம்

  Like

 5. சரியாக சொன்னீர்கள்! இதையே தான் நானும் நினைப்பேன் மலையாளப் படங்கள் பார்க்கும்போது… நண்பர்களிடம் கூட சொல்வதுண்டு பதிவு போடலாம் என்று கூட நினைத்திருந்தஏன்! எப்படியிருந்தாலும் மற்றவர்கள் சொல்வதும் சரியாகதான் படுகிறது!

  Like

 6. அட பரவாயில்லையே! தமிழ்னாட்டுத் தமிழனுக்கும் தன்மான உணர்வு
  இருக்குதே!! ஆரம்பத்தில் ஈழத் தமிழனும் சிங்களவன் குட்டும்போது அக்கறை காட்டாமல் விட்டதால் இப்போது அடியும் உதையும் வாங்க வேண்டியிருக்கு. பார்த்து நடந்துக்க சாமி!

  Like

 7. அன்பிற்கினிய ஐயா,

  மனம் திறந்து பேசும் உங்கள் கட்டுரை என்னைக் கவர்ந்தது.

  என் தாய் தந்தையர் கேரளாவைச் சார்ந்தவர்கள். நான் சேன்னையிலேயே பிறந்து வளர்ந்து வாழ்ந்து கொண்டு வருபவன். தமிழை அதிகமாய் நேசிப்பவன்.

  மலையாள இயக்குனர்களின் இந்த தவறை நானும் பல முறை கண்டு கடிதங்கள் போட்டிருக்கிறேன். அவர்களின் இந்த செயலை கண்டிப்பாய் எதிர்க்க வேண்டியது எதிர்ப்போம்! எதிர்ப்போம்! -வெற்றி நிச்சயம்.

  இருப்பினும் சிலர் செய்யும் ( கேரள அரசும் சில இயக்குனர்களும்) தவறுகளைக் கண்டு ஒட்டுமொத்த கேரள மக்களை யாரும் வெறுக்கக் கூடாது என்பதே எனது கருத்தும் எதிர்பார்ப்பும்.

  அன்புடன்
  என் சுரேஷ்
  nsureshchennai@gmail.com

  Like

 8. /\
  நிச்சயமாக சுரேஷ். மலையாளத் திரைப்படங்களை விரும்பிப் பார்ப்பவன் நான், எனவே தான் அந்த உறுத்தல் மனசுக்குள் இருந்து கொண்டே இருந்தது. ஒட்டுமொத்த மலையாளிகளை திட்டும் எண்ணம் சிறிதும் இல்லை. எனக்கு நிறைய்ய்ய்ய்ய மலையாள நண்பர்கள் உண்டு 🙂

  Like

 9. அன்புடையீர்

  வணக்கம். நான் பிறப்பால் தமிழன். ஆனால் என்னைக் கவர்ந்தவை மலையாளப் படங்கள்தாம். இன்று சிறுபிள்ளைத்தனமாக நடிக்கும் தமிழ் நடிகர்களை விட, மம்முட்டி, மோகன்லால், ஜெயராம் முதலிய மலையாள நடிகர்களைத்தான் எனக்கு அதிகம் பிடித்திருக்கிறது. ஒரு சில மலையாள இயக்குநர்கள் செய்யும் தவறுக்காக, ஒட்டு மொத்த மலையாள திரை உலகத்தைக் குறை சொல்வது தவறு.

  அன்புடன்
  எழுத்தாளர் ஒளிர்ஞர்

  Like

 10. “”மலையாள ஆசை””

  எனக்கு நீண்ட நாளாக ஆசை. மலையாளத்தில் திரைப்படம் தயாரிக்க வேண்டும். நிச்சயமாக தமிழில் திரைப்படம் தயாரிக்க மாட்டேன். ஏனெனில் எதார்த்தங்களுக்கும், அறிவு ஜீவித்தனத்திற்கும் அதிக மரியாதை கொடுப்பவர்கள் மலையாள மக்கள்.

  அன்புடன்
  எழுத்தாளர் ஒளிர்ஞர்

  Like

 11. Hmm.. idhu tamil – malayalam culturela mattum nadakuradhu illa. Namba naatula, Settunga, sardharji, paavapatta pakistan kaarunga ellarayum villainsaa thaane kaaturom?

  Eppavumae anniyamaa irukuravangala villathanamaa kaatunaa nalla edupadum.. Indha logic easya work out aagudhu!!!

  Tamilnaatu kaaranga nalla madhiri vandhirukura padathayum naan paathirukken!! life la idhu ellaam sagajam appa!! vittu thallunga!

  Like

 12. I too agree with you Xavier. Malyalees have the superiority complex alwyas. thou i like to see malayala movies than tamil. as I think Mamooty never entertained such, most of the Mohanlal movies having such charaters (since Chitram).

  I think it might be jelous.

  besides some of our tamil directors also showing bad about other language. that to very bad.

  at 90’s that was a trend to show tamil charaters / words for funny in hindi serials. (now no).

  I too think about to write this since long time. thanks for you

  Like

 13. சமீபத்திய மம்முட்டியின் ராஜமாணிக்கம் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. தமிழ்நாட்டில் நடக்கும். ஆனால் எல்லா நல்ல பாத்திரங்களும் மலையாளிகள். வில்லத்தனம் செய்யும் மலையாளிப் பாத்திரம் கூடத் திருந்தி விடும். ஆனால் சேவியர் நாடார் என்ற பாத்திரம் மட்டும் திருந்தாமல் மாடு முட்டிச் செத்துப் போவார். சிவப்புச் சட்டை போட்டிருப்பார். அதில் வரும் தமிழ் அரசியல்வாதிகளும் காமெடியன்கள்தான். இந்த மம்முட்டிதான் மிகவும் கண்ணியமாக ஐயர் தி கிரேட்-டில் நடித்தது.

  மேலேபரம்பில் ஆண் வீடு என்றொரு படம். மலையாளி ஒருவன் பொள்ளாச்சிக்கு வேலைக்கு வருகிறான். அங்கு தமிழ்ப் பெண் ஷொபனாவைத் திருமணம் செய்து கொள்கிறான். பிரச்சனைகள் வருகின்றன. இந்தப் படம் நடுநிலையானது என்று சொல்லலாம். மலையாளப் படம் என்று பார்க்கப் போகையில்…இந்தப் படத்தை மன்னித்து விடலாம்.

  ஆனால் கிளாஸ்மேட்ஸ் வேறு விதம். அதில் பாலச்சந்திரமேனன் பாத்திரம் தமிழ்ப் பாத்திரம். அது மிகுந்த குணச்சித்திரம் கொண்ட பாத்திரம். அந்தப் பாத்திரம் தனது மனைவியோடும் மகனோடும் மட்டும் தமிழ் பேசும். மகன் இறந்த பின் அம்மா தமிழில்தான் கதறுவார். மகனோடு படித்தவர்கள் மனைவி மக்களோடு வருகையில், “நம்ம மகனும் இருந்திருந்தா இப்பிடி மனைவியோட வந்திருப்பான் இல்ல” என்று புலம்புவார். கிளாஸ்மேட் இந்த விஷயத்தில் பாராட்டப் படவேண்டியதே. நல்ல படமும் கூட. கண்டிப்பாக பாருங்கள்.

  பொதுவாக இப்பொழுது புதிதாக வரும் இயக்குனர்களே மசாலாவை அள்ளித் தெளிக்கிறேன் என்று இந்த மாதிரி குசும்புகள் செய்வது. பெரிய இயக்குனர்கள் அமைதியாகவே இருக்கிறார்கள்.

  Like

 14. Tharpothaiaya Trendukkaga
  Malayal Thiraiyulagam Thanathu Niratthai Mattrivaruvathu Unmaithaan.
  Aanaal…..
  Thamil Thiraiyulagam Thanathu Nirrathaiye Maranthuvittathu Enpathuthan Varutthamana Visayam.
  Eninum, Oru sila Iyakkunarhal Manathirkku Aaruthal Tharuhindranar….

  Like

 15. whatever or how ever they are insulting tamil cultur or people in their movies…..but still the malyalees like to watch tamil movies andhear tamil songs………..may be malyal directors kellam poraamiayaga irukkalaam….
  whatever moththathil tamilanukku maanam,rosham ethuvume kidayaadhu….ithu thaan unmai……
  Kalabhavan mani enra actor oru malayala padththil(paer gnabaham illai) avanathu lunki yai thooki kaatti “pandikala ) enru vasanam pesiruppan….athey kalabavan mani yai tamilil nadikka chance koduththu vazh vachchathum intha tmilnattu kkarran thaaan……mohanlal kooda oru tamil magazine la koduththa interview il “tamil cine industrie yil nalla directors yaarum illa” enru kooriyirunthaaan…..irunthum avanai inka nadikka koopuduranunga…..enna panna …….tamilan moththahula yemaali, komaali,,innum niraya sollalam….

  Like

 16. பதிவு பற்றி கருத்து சொல்ல விழைந்தேன். ஆனால் பல மாதங்கள் ஆன பதிவான படியால் மறு மொழிகள் ஏற்கனவே எல்லாக் கருத்துகளும் அளிக்கப் பட்டிருக்கின்றன. ஆகையால் நழுவுகிறேன்.

  Like

 17. தமிழ் படங்கள் மலயாளப் பெண்களை இழிவு படுத்தலை பற்றியும் நீங்கள் குறிப்பிட்டிருக்கலாம். பசுபதி ராசக்காபாலையம் – சின்னக்கலைவாணர் விவேக் போதும்.

  Like

 18. //தமிழ் படங்கள் மலயாளப் பெண்களை இழிவு படுத்தலை பற்றியும் நீங்கள் குறிப்பிட்டிருக்கலாம். பசுபதி ராசக்காபாலையம் – சின்னக்கலைவாணர் விவேக் போதும்.//

  தப்பு தான்,ஆனால் ஒப்பீட்டளவில் ரொம்ப ரொம்பக் குறைவே… அதுவும் நகைச்சுவை தாண்டி பெரிதாக ஒன்றும் இல்லை….

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s