இவன் தான் அறிவுக் கொழுந்து !

இந்த அறிவுக் கொழுந்தைப் பார்த்து சிரிக்கிறதா ? பக்கத்துல இருக்கிற வேனோட பெயரைப் பார்த்து சிரிக்கிறதா 🙂

arivuk-kozhunthu.jpg

ஒரே நாளில் சூப்பர் மேன் ஆன தயாநிதி !!!

maran.jpg

தயாநிதி மாறன் பதவியை ராஜினமா செய்ததன் மூலம் நடுவண் அரசு ஒரு திறமையான அமைச்சரை இழந்து விட்டது என்று இல கணேசன் கூறியிருக்கிறார் !

ஆஹா !! தயாநிதி மாறன் சுயநலமாகச் செயல்படுகிறார், சன் குழுமத்தின் வளர்ச்சிக்காக மட்டுமே பாடுபடுகிறார், சமூக அக்கறை இல்லை என்றெல்லாம் அடுக்கடுக்காய் புகார் கூறிய பா.ஜ.க தயாநிதி மாறனைப் பற்றி இப்படி புகழ்கிறதே என்று சிரித்துக் கொண்டே செய்தியைப் படித்தேன்.

இந்தியாவில் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு தயாநிதி காரணம் என்றும், அன்னிய முதலீடுகளின் அதிகரிப்பிற்கு தயாநிதி காரணம் என்று இல கணேசன் தெரிவித்திருக்கிறார்.

ஆமா, தயாநிதி மாறன் அமைச்சரவையில் இருக்கும் போது இப்படி ஒரு அறிக்கையை இல வெளியிட்டிருக்கலாமே ? அதுக்கு கட்சி இடம் கொடுக்காதோ ? நல்ல திறமையான அமைச்சர்கள் எந்தக் கட்சியில் இருந்தாலும் மனம் விட்டுப் பாராட்டும் நிலைக்கு நாம் உயர என்ன செய்ய வேண்டும் ? ராஜினமா செய்வதைத் தவிர ??

இனி தயாநிதி மாறனின் திறமைகளைக் குறித்து எல்லா கட்சிகளும் பாராட்டித் தள்ளும். தயாநிதி எங்கும் சேராமல் இருக்கும் வரை தான் இந்தப் பாராட்டுகள் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.

எங்கேயாவது சேர்ந்து விட்டால் இப்போது பாராட்டும் வாய்களே நாளை சூனியக்காரியின் வாயாக மாறி சாபங்களை தரையிறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

போரடிச்சுப் போச்சுடா சாமி !!!

வெயிலில் இருந்து தப்பிக்க…

veyil.jpg

வெயிலின் ருத்ரதாண்டவம் சென்னையை வாட்டி வதைக்கிறது. சமீப காலமாகத் தான் வெயிலில் ஏறுமுகம் ! வருங்காலத்தில் வெயில் காலங்களில் மக்கள் சென்னையை காலி செய்துவிட்டு வெளியூர்களுக்கு ஓடினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

வருத்தமான செய்தி நிறைய மக்கள் வெயிலில் சுருண்டு விழுந்து இறந்து போனார்கள் என்பது தான்.
வெயிலில் இருந்து தப்பித்துக் கொள்ள சில வழிவகைகளை நாம் கடைபிடிக்க வேண்டும். வாழ்க்கை முறையை சற்றே மாற்றிக் கொள்வதன் மூலம் இயற்கையின் போரை நாம் எதிர்கொள்ள முடியும் என்பது தான் உண்மை. ஏனெனில் நாம் இயற்கையின் அங்கம் !

வெயில் திரைப்படம் நல்லா தான் இருந்துது.
வாழ்க்கையில வெயில் கொடுமையா தாம்லே இருக்கு !!!

ஆஸ்திரேலியாவின் fielding அட்டகாசம் !!!

இப்படி ஒரு பீல்டிங் கிற்குக் காரணம் தன்னம்பிக்கையா ? கர்வமா ? இளக்காரமா ? பயமுறுத்தலா ?

( படம் முழுசா தெரியலேன்னா கிளிக் பண்ணுங்க பிளீஸ் )

australia.jpg