ஒல்லியானவர்களுக்கும் தேவை ! உடற்பயிற்சி.

ex1.jpg

ஒல்லியாய் இருப்பவர்கள் உடற்பயிற்சி செய்யத் தேவையில்லை எனும் மனநிலையில் இருப்பார்கள் அவர்களும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழவேண்டுமெனில் நிச்சயமாக உடற்பயிற்சி செய்யவேண்டும் என்று லண்டனின் வெளியான ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

ஓடுவதும், உடல் வியர்க்க உடற்பயிற்சி செய்வதும் குண்டாக இருப்பவர்களுக்கு மட்டும் தான் என்றும், ஒல்லியாக இருப்பவர்கள் வரம் வாங்கியவர்கள் அவர்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டாம் எனும் கருத்து பரவலாக உள்ளது. அந்த எண்ணத்தை உடைத்திருக்கிறது இந்த ஆராய்ச்சி.

ஆரோக்கியமான வாழ்க்கை என்பதும் உடல் எடையைக் குறைப்பதில் மட்டுமல்ல என்றும், சரியான உடற்பயிற்சி செய்யாத ஒல்லியான மனிதருக்கும் குண்டான மனிதருக்கு வர வாய்ப்புள்ள அத்தனை பிரச்சனைகளும் வரும் என்றும் அந்த ஆராய்ச்சி பயமுறுத்துகிறது.

உடலிலுள்ள கொழுப்பை சரியான அளவுக்குள் வைத்திருக்க இந்த உடற்பயிற்சிகள் மிகவும் முக்கியமானவை. அதே நேரத்தில் நல்ல இரத்த ஓட்டத்திற்கும், சுறுசுறுப்புக்கும் கூட உடற்பயிற்சிகளே துணை செய்கின்றன.

தினமும் முப்பது நிமிடங்கள் எனும் அளவில் வாரம் ஐந்து நாட்கள் உடற்பயிற்சி செய்வதை ஒல்லியானவர்களும் கடைபிடிப்பதே ஆரோக்கிய வாழ்வுக்கு சிறந்தது என அந்த ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

யார் இவர் ? கண்டு பிடிங்க பார்க்கலாம் !!!

புடவையில் அம்சமாய் இருக்கும் இந்த அம்மணியை அடையாளம் தெரிகிறதா ? உங்களுக்கெல்லாம் மிகவும் நன்றாகப் பரிச்சயமான நபர் தான் !.. என்ன இன்னும் கண்டு பிடிக்க முடியலையா ? …. இன்னொரு முறை படத்தைப் பாருங்க… இல்லேன்னா கடைசில பாருங்க…

who.jpg

இது நம்ம சச்சின் டெண்டுல்கர் !